வீட்டிலிருந்தபடியே வயலில் உள்ள மின்மோட்டாரை இயக்கும்விதமாக செல்போன் செயலியை உருவாக்கி, தஞ்சை மாவட்டம் விவசாயிகளுக்கு பொறியியல் பட்டதாரி ஒருவர் வழங்கி வருகிறார். ஒரத்தநாடு கீழையூர் விவசாய குடும்பத்தில் பிறந்த பொறியியல் பட்டதாரி அரவிந்த். சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வமுடையவர். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் நிலத்தடி நீரை நம்பியே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் எப்போது வரும் எப்போது தடைபெறும் என தெரியாத நிலையில், வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மோட்டாரை இயக்குவதும், நிறுத்துவதுமாக சிரமப்பட்டு வந்தனர். இதைப்பார்த்த அரவிந்த் அதற்கு தீர்வுகாண நினைத்தார். அதன் விளைவாக செல்போன் மூலம் மின் மோட்டாரை இயக்குவதற்கும், இருமுனை மின்சாரம் மும்முனை மின்சாரம் தண்ணீர் தேவை உள்ளிட்ட அனைத்தையும் கண்டறியும் வகையில் ஒரு செயலியை உருவாக்கி ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழங்கி வருகிறார். இதனால் விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
http://dlvr.it/S3ymff
http://dlvr.it/S3ymff