தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது மூணாறு. இது, கேரள மாநிலத்தின் எல்லைகுட்பட்ட பகுதியில் உள்ளது. இங்கு, திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளியாகும் உமிழ்நீரான ‘அம்பர்கிரிஸ்’ஐ ரூ.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கேளர வனத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மூணாறு பகுதி வனச்சரகர் ஹரீந்திர குமார், லஞ்ச ஒழிப்பு துனைச் சரகர் ஜெய்சன் ஜோசப் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மூணாறில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட ஐந்தரை கிலோ எடை கொண்ட அம்பர்கிரிஸ்
அப்போது அங்கிருந்த அறை ஒன்றில் நடத்திய சோதனையில் ஒரு சாக்குப்பையில் ஐந்தரை கிலோ எடை கொண்ட ‘அம்பர்கிரிஸ்’ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் தங்கியிருந்தவர்களிடம் அவர்கள் நடத்திய விசாரணையில், ‘ஐந்தரை கிலோ அம்பர்கிரிஸை 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும், விற்பனை செய்துவிட்டு பணத்தைப் பங்கு போடுவதற்காக லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அறையில் தங்கியிருந்த மூணாறைச் சேர்ந்த முனுசாமி, அவரது தம்பியான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த முருகன், ரவிக்குமார், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன், சேது ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம், திமிலங்கத்தின் எச்சம் எங்கிருந்து கிடைத்தது? யாருக்கு விற்பனை செய்வதற்காகத் திட்டமிட்டிருந்தனர்? அவர்களின் கடத்தல் பின்னணி குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ’அம்பர்கிரிஸ்’ குறித்து மீன்வள ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் பேசினோம், “ ‘ஸ்பெர்ம்’ என்ற எண்ணெய்த் திமிங்கலத்தின் ‘உமிழ்நீர்’ அல்லது ‘வாந்தி’ எனப்படும் ஒருவிதக் கழிவுப்பொருள்தான் ’அம்பர்கிரிஸ்’. கறுப்பு நிற அம்பர்கிரிஸ்
இந்த ஸ்பெர்ம் திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்தது உருவாகுவதாகச் சொல்லப்படுகிறது. திமிங்கலம் தன் இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது. கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்களை இரையாக விழுங்கும்போது அவற்றின் கூர்மையான உறுப்புகள், முட்கள் போன்றவை திமிங்கலத்தின் செரிமான உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தும்.
அதைத்தடுப்பதற்காக, திமிங்கலம் ’அம்பர்கிரிஸ்’-ஐத் தற்காப்பு கவசமாகப் பயன்படுத்துகிறது. தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. அந்தக் கழிவுகள், அம்பர்கிரிஸ்ஸாக கடலில் மிதக்கின்றன. இவை, சூரியஒளி பட்டு கட்டியாகவும், கடல் நீரால் கறுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களுக்கு மாறுகின்றன. கடல் அலைகளால் அடித்து வரப்பாட்டு கடற்கரை ஓரத்திலும், சில நேரங்களில் மீனவர்களின் மீன்பிடி வலைகளிலும் சிக்குகின்றன” என்றனர். அம்பர்கிரிஸுக்கு ஏன் இந்த மதிப்பு என வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், “இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் எண்ணெய் திமிங்கலங்கள், பாதுகாக்கபட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. வெள்ளைநிற அம்பர்கிரிஸ்
கைது செய்யப்பட்ட கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்தரை கிலோ அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி மதிப்புடையதாகும். இந்த ’அம்பர்கிரிஸ்’-ஐ உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காகவும், விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பில்கூட பயன்படுத்தப்படுகிறதாம். வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்தும் அரபு நாடுகளில் அம்பர்கிரிஸுக்கு தனி வரவேற்பும் உள்ளதாம்.
ஒரு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.1 முதல் ஒன்றரை கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைவிட இதன் மதிப்பு பல மடங்காகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இதை ’கடல் தங்கம்’, ‘மிதக்கும் தங்கம்’ என்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. கறுப்பு நிற அம்பர்கிரிஸ்
இருப்பினும், இந்தக் கடத்தலை முடிந்தவரை தடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றனர். கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 2 கிலோ எடையுடைய ’அம்பர்கிரிஸ்’ஐ ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்தான், வனத்துறையினர் மற்றும் போலீஸரால் இவை அதிகமாக பறிமுதல் செய்யப்படுகின்றன.
http://dlvr.it/S4Nv2D
http://dlvr.it/S4Nv2D