உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பெண் ஒருவர், டாக்ஸி ஓட்டுநரைக் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறுவிதமான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
முதலில் வெளியான வீடியோ!
சுமார் இரண்டு நிமிடம் ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியா முழுவதும் அந்த வீடியோ வேகமாகப் பரவியது. லக்னோவின் ஆவாத் பகுதியிலுள்ள சிக்னல் அருகே எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பெண் ஒருவர், டாக்ஸி ஓட்டுநர் ஒருவரைக் கடுமையாகத் தாக்குகிறார். இந்தச் சம்பவத்தைக் கண்ட டிராஃபிக் கான்ஸ்டபிள் அந்தப் பெண்ணை தடுக்க முயல்கிறார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்தப் பெண், தன்னை அந்த ஓட்டுநர் இடித்துவிட்டதாகக் கூறி 22 முறை அந்த ஓட்டுநரின் கன்னத்தில் எகிறி எகிறி பளார் என்று அறைகிறார். முதலில் அமைதியாக இருந்த ஓட்டுநர், பின்னர் `பெண் போலீஸைக் கூப்பிடுங்கள்’ என்கிறார். இதற்கிடையில் அந்த ஓட்டுநர் தரையில் கிடக்கும் தனது செல்போனைக் கையிலெடுக்கிறார்.#ArrestLucknowGirl
Also Read: 9 ஆண்டுகள் டெலிகாம் அனுபவம்; OLX-ல் விற்பனை செய்தவர்களிடம் Paytm மூலம் மோசடி - சிக்கிய உ.பி ஆசாமி!
இந்தப் பிரச்னையால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. வீடியோவின் இரண்டாம் பாதியில், அங்கிருந்த ஒருவர் வந்து அந்தப் பெண்ணைத் தடுக்க முயல்கிறார். அவரிடம் `என் செல்போனை அந்தப் பெண் உடைத்துவிட்டார்' என்கிறார் அந்த ஓட்டுநர். ஆனால், தடுக்க வந்த நபரையும் மீறி அந்த ஓட்டுநரின் தலையில் அடிக்கிறார் அந்தப் பெண். அந்த வீடியோ முடியும் தறுவாயில், ஓட்டுநரைத் தொட வேண்டாம் என தடுக்க வந்த நபர் எச்சரிக்க, அவரையும் தாக்குகிறார் அந்தப் பெண். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, `இவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக நிற்கிறார் அந்த ஓட்டுநர். ஒருவேளை அவர் அந்தப் பெண்ணை அவர் இடித்திருந்தால்கூட, போலீஸாரிடம் அந்தப் பெண் புகாரளித்திருக்கலாம். எப்படி அவரை நடுரோட்டில்வைத்து அனைவரும் பார்க்கும் வண்ணம் அடிக்கலாம்' என்று சொல்லி அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர் நெட்டிசன்கள்.
இதற்கிடையில் அந்த டாக்ஸி ஓட்டுநர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாக, இன்னும் பெரிதாக மாறியது இந்த விவகாரம். தொடர்ந்து, #ArrestLucknowGirl என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அந்தப் பெண்ணை கைதுசெய்யுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.
உ.பி-யைச் சேர்ந்த பெண் ஒருவர், ``ஒரு பெண் தான் செய்த குற்றம் நிரூபணமாகும் வரை குற்றமற்றவர். அதே ஒரு ஆண், தான் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை குற்றவாளி. இந்தநிலை எப்போது மாறப்போகிறதோ... இந்தப் பெண் செய்தது தவறு. இது பெண்ணியம் அல்ல'' என்று பதிவிட்டிருக்கிறார்.லக்னோ பெண், டாக்ஸி ஓட்டுநர்தொடர்ந்து, இந்தியா முழுவதும் இந்த வீடியோ பரவிய காரணத்தால், #ArrestLucknowGirl என்கிற ஹேஷ்டேக் இந்திய டிரெண்டிங்கில் பல மணி நேரம் முதலிடத்திலேயே இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாள்களாக இந்திய டிரெண்டிங்கிலேயே இருந்தது இந்த ஹேஷ்டேக்.
இதன் விளைவாக ஓட்டுநரைத் தாக்கிய அந்தப் பெண்ணின் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது உ.பி காவல்துறை.
சிசிடிவி காட்சிகள்!
இதற்கிடையில் அந்த சிக்னலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி-யின் காட்சிகள் வெளியாயின. அந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த பின்னர், பெண்ணின் பக்கமும் சில நியாயங்கள் இருக்கின்றன என்பது போன்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுவருகின்றன.
அந்த சிசிடிவி காட்சியில், ரெட் சிக்னல் விழுந்த பின்னும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் சென்று கொண்டிருப்பது பதிவாகியிருக்கிறது. அதன் பிறகு, அந்தப் பெண் ஜீப்ரா கிராஸிங்கில் சாலையைக் கடக்கிறார். அப்போதும் வாகனங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. முக்கால்வாசி சாலையைக் கடக்கும் தறுவாயில் டாக்ஸி ஒன்று வேகமாக வந்து அந்தப் பெண் அருகே சடாரென்று பிரேக் அடிக்கிறது. அந்த டாக்ஸி பெண்ணின் மீது மோதியதா என்பது அந்த சிசிடிவி காட்சியில் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண் கீழே விழவில்லை என்பது தெரிகிறது. பின்னர் அந்தப் பெண் டாக்ஸியின் கதவைத் திறந்து ஓட்டுநரின் செல்போனை எடுத்து சாலையில் போட்டுடைக்கிறார். தொடர்ந்து அவரைத் தாக்கவும் செய்கிறார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு இரண்டு பேரின் மீதும் தவறிருக்கிறது என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன. ``ரெட் சிக்னலில் நிற்காமல் வேகமாகச் செல்ல முயன்றது அந்த ஓட்டுநரின் தவறு. அதற்காகச் சட்டத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு, ஓட்டுநரின் செல்போனை உடைத்து, அவரைப் பலமுறை அந்தப் பெண் தாக்கியதும் தவறு. இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்'' என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Here's the full video. Ab batao galti kiski hai?
Please RT and tag @Uppolice#ArrestLucknowGirl
pic.twitter.com/mvLVHMv1kT— Shahcastic - Mota bhai (@shahcastic) August 2, 2021
Also Read: கருணாநிதிக்கு பரிசு; ஜெயலலிதாவுடன் கன்னட உரையாடல்; 13 ஆண்டுகளில் முதல்வர் -யார் இந்த பசவராஜ் பொம்மை?இந்த சிசிடிவி காட்சிகளை ஷேர் செய்த குஜராத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், ``அந்தப் பெண் செய்தது சரி என்று சொல்லவில்லை. ஆனால், அந்த ஆண் நபருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம், அவர் காரைச் சரியாக நிறுத்திவிட்டார். ஒருவேளை நிறுத்தத் தவறியிருந்தால் அந்தப் பெண்ணின் கதி? ரெட் சிக்னல் விழுந்த பிறகு அவரும் சரி, மற்றவர்களும் சரி வாகனங்களை நிறுத்தாமல் சென்றுகொண்டிருக்கின்றனர். அங்கிருந்த போக்குவரத்துக் காவலரும் வாகனங்களை நிறுத்த முயலவில்லை. ரெட் சிக்னலை மீறிச் சென்றவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட வேண்டும்'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
http://dlvr.it/S4x8xR