மும்பை மான்கூர்டு பகுதியைச் சேர்ந்த முஜ்பூர் ஷேக் என்பவர் 14 வயது சிறுமியை சிறார் வதை செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட சில நாள்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்ய தடையில்லா சான்று கொடுத்தார். இதற்கு, விசாரணை நீதிமன்றம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Sexual Harassment (Representational Image)
Also Read: `திருமண உறவில் பாலியல் வன்கொடுமை குற்றமல்ல'-சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து... ஒரு முக்கோண அலசல்
``மிகவும் தீவிரமான குற்றத்துக்கான ஒரு புகாரை கொடுத்துவிட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டவுடன் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய மனுதாரர் ஒப்புதல் கடிதம் கொடுப்பது அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலாகும். எனவே மனுதாரருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. குற்றவாளி ஜாமீனில் விடுவிக்கப்படும் போது மனுதாரர் அரசுக்கு செலுத்தவேண்டிய அபராத தொகை கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என்று நீதிபதி கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஜராகி, தன் மகள் குற்றவாளியைக் காதலிப்பது தனக்குத் தெரியாது என்றும், இப்போது இரு தரப்பினரும் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டோம் என்றும், எனவே மேற்கொண்டு இதனை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
``அபராத பணமான ரூ. 30,000-ஐ குற்றவாளி செலுத்துவதால் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் விசாரணை முடிந்துவிட்டதால் குற்றவாளியை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோர்ட் கருதுகிறது'' என்று நீதிபதி தெரிவித்தார். கோர்ட் (சித்தரிப்பு படம்)
Also Read: சென்னை: மாயமான இரண்டு சிறுமிகள்; சிறார் வதை! - இரு வேறு சம்பவங்களில் போக்சோவில் கைதான இளைஞர்கள்
அரசு வழக்கறிஞர் ஆஜராகி, குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்தார். ``குற்றவாளி ஏற்கெனவே திருமணமானவர். குற்றவாளி இதுபோன்ற குற்றத்தை அடிக்கடி செய்யக்கூடியவர். வெளியில் வந்தாலும் இது போன்ற குற்றத்தை செய்வார்'' என்று தெரிவித்தார்.
குற்றவாளி, பாதிக்கப்பட்டவரை எந்த விதத்திலும் மிரட்டக்கூடாது என்று நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொண்டு விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
http://dlvr.it/S6bv6F
http://dlvr.it/S6bv6F