மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ், மும்பை, தானே, பால்கர், ராய்கட் போன்ற பகுதியில் இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ஜல்காவில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகமான இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆற்றில் திடீரென நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடுவதால் மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. வெள்ளத்தில் 15 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியைத் தீயணைப்புத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Also Read: பூமிக்கு அடியில் கான்கிரீட் குளங்கள்... மழை வெள்ளத்தில் இருந்து விடுபடுமா மும்பை?மழைநீரால் சூழப்பட்ட ஜல்காவ்
இது தவிர அதிகாரப்பூர்வமாக மழைக்கு ஒருவர் இறந்துவிட்டார். மழை வெள்ளத்தில் 800-க்கும் அதிகமான ஆடு, மாடுகள் அடித்து செல்லப்பட்டுவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னாட் தாலுகாவில் உள்ள ஜலிஸ்காவ் என்ற இடத்தில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் அடுத்த இரண்டு நாள்களுக்குக் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் வடமேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்த கனமழை காரணமாக காட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த நூற்றுக்கணக்கானோர் வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேசமயம் அக்டோபர் மாதம் மிகவும் குறைவான அளவு பருவ மழை பெய்துள்ளது.
http://dlvr.it/S6kRxG
http://dlvr.it/S6kRxG