Wednesday 8 September 2021
ஆப்கான்: தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த்
அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப்போவதாக அமெரிக்க படைகள் அறிவித்த நிலையில், அங்கு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர். பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், தலிபான் நிறுவர்களில் ஒருவரான முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியாவார். சமயத் தலைவர் என்பதைவிட, ராணுவ தளபதியாக அறியப்பட்ட ஹசன் அகுந்த், தற்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார். பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர். இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 19 பேரும் தலிபான்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர், தலிபான்கள் அல்லாதவர்களையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கை ஏற்கபடவில்லை. இடைக்கால அரசு எவ்வளவு ஆட்சியில் இருக்கும்? எப்போது தேர்தல் நடத்தப்படும்? என்ற கேள்விகளுக்கு தலிபான்கள் பதில் அளிக்கவில்லை. இதனிடையே, ஆப்கான் புதிய அரசு அமைவதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் இயக்குநர் பயஸ் ஹமீது, கடந்த வாரம் காபூல் பயணம் மேற்கொண்ட நிலையில், புதிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் நிர்வாகிகளை தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என அந்நாட்டின் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கன் மக்கள் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான்கள்
http://dlvr.it/S78Y8f
http://dlvr.it/S78Y8f
இன்று இரு முறை கூடும் தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், அவை நடவடிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடி, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. நாளை காவல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்பு 13-ஆம் தேதியும் விவாதம் தொடரும் என்றும் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுவார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 13 ஆம் தேதியுடன் அவை முடிவடையும் நிலையில், அன்றைய தினம், கேள்வி நேரம் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இதையும் படியுங்கள்: “எல்லாம் கருணாநிதி மயம்” – திமுக ஆட்சியில் கருணாநிதி பெயரில் வெளியான அறிவிப்புகள் பட்டியல்
http://dlvr.it/S785Gt
http://dlvr.it/S785Gt
Tuesday 7 September 2021
நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக - கேரள சாலைகளில் 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக் குழு
ஒருபக்கம் கொரோனா தொற்று பாதிப்பு கேரளாவில் குறையாத வேளையில், தற்போது அங்கே நிபா வைரஸும் பரவ ஆரம்பித்திருக்கிறது. கேரளாவிலேயே கோழிக்கோடு மாவட்டத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க இதே கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் தற்போது மரணமடைந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.நிபா வைரஸ்
Also Read: நிபா வைரஸ்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவர் மரணம்!
இந்நிலையில், தமிழகத்திற்கு அண்டைமாநிலமான கேரளாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் மக்களில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் அறிவுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக கேரளாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள கேரளாவை இணைக்கும் சாலைகளில் மிகுந்த விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட துணை பொது சுகாதார இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
மிகக் குறிப்பாக இந்த இணைப்புச் சாலைகள் அனைத்திலும் 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு மருத்துவக் குழுவை கண்காணிப்புப் பணியில் அமர்த்தவேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வௌவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்தோ, அழுகிப்போன உணவுகளிலிருந்தோ நிபா வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்தும் மற்றொருவருக்கு இந்த நோய் பரவும். Bats (Representational Image)
Also Read: நிபா வைரஸ்: `தரையில் கிடக்கும் ரம்புட்டான் பழங்களைச் சாப்பிட வேண்டாம்!' - கேரள அரசு அறிவுறுத்தல்
இந்த நோய்த்தொற்றுக்கென்று பிரத்யேக சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ கிடையாது. நோயாளிக்கு சப்போர்ட்டிவ் கேர் (SUPPORTIVE CARE) மட்டுமே கொடுக்க முடியும்.
உலகிலேயே முதன்முறையாக 1999-ம் ஆண்டு மலேசியாவில்தான் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அங்குள்ள பன்றி வியாபாரம் செய்பவர்களிடையே இந்த நோய்த்தொற்று காணப்பட்டது. அதேபோல 2001-ம் ஆண்டு வங்கதேசத்திலும் இந்த வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டுதான் கேரளாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில்தான் தொற்றுப் பரவல் அப்போது இருந்தது. அதுமட்டுமல்லாமல் 17 பேர் இந்த நிபா நோய்த்தொற்றுக்கு அப்போது உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S761q8
http://dlvr.it/S761q8
செங்கல்பட்டு: 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரேனா நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை அடுத்து பல தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1 மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் 1 மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகம் அரசு உதவி பெறும், இந்து மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S74vY2
http://dlvr.it/S74vY2
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு
உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிடுள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. வார்டு மறு வரையறை செய்யப்படதாதல் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உள்ளாட்சிப் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை குறித்தான அரசாணையை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை வெளியிடுள்ளது. இதையும் படியுங்கள்: அண்ணாவின் பெயரை திருமகன் ஈவெரா விட்டுவிட்டார் - துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை
http://dlvr.it/S74Rc5
http://dlvr.it/S74Rc5
Monday 6 September 2021
` எடா, எடி என அழைக்க பொதுமக்கள் குற்றவாளிகள் அல்லர்!' - காவல்துறையை கண்டித்த கேரள உயர்நீதிமன்றம்
கேரள மாநிலம் திருச்சூர் போலீஸார் தன்னையும், தன் மகளையும் அவமானப்படுத்தியதாக, கடை நடத்திவரும் வியாபாரி அனில் என்பவர் ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``திருச்சூர் சேர்ப்பில் பகுதியில் நான் கடை வைத்திருக்கிறேன். அங்கு வந்த சேர்ப்பில் காவல் நிலைய எஸ்.ஐ என் மகளிடம் மோசமாக நடந்துகொண்டார். எங்களிடம் கெட்டவார்த்தைகளை பேசி அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டார்" எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து நீதிமன்றம் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், மனுதாரரும் அவரின் மகளும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் விதிகளை மீறியதாக திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனுவை விசாரித்த கோர்ட், மாவட்ட கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையில் ஆதாரங்களைச் சமர்பிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியது.கேரள ஐகோர்ட்
Also Read: வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!
மேலும், `சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதி கண்டோன்மென்ட் ஸோன் ஆக இருந்ததா, லாக்டெளன் அமலில் இருந்ததா என்ற விபரங்கள் அறிக்கையில் இல்லை. எனவே கூடுதல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அந்தக் கூடுதல் அறிக்கை கடந்த மாதம் 25-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ``பொதுமக்களிடம் காவல் துறையினர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இது குறித்து டி.ஜி.பி சர்க்குலர் வெளியிட வேண்டும்'' என உத்தரவிட்டார்.மேலும், கேரள ஐகோர்ட் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தனது தீர்ப்பில் கூறுகையில், ``கொரோனா லாக்டெளன் காலத்தில் காவல்துறையின் வன்முறை அதிகரித்துள்ளதாக பரவலாகப் புகார்கள் வருகின்றன. பொதுமக்களை `எடா', `எடி' என போலீஸார் அழைக்கக்கூடாது. போலீஸின் முன்பு வருபவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்லர். அவர்களை குற்றவாளிகள் போல நடத்தாதீர்கள்.Court- Representational Image
Also Read: கேரளாவை அதிரவைத்த வீடியோ; போலீஸ் லாக் செய்த காருக்குள் கதறிய 3 வயது குழந்தை! - நடந்தது என்ன?
தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலர்களின் மோசமான செயல்பாட்டை பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவலர்கள் தங்கள் நடத்தையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/S72fVH
http://dlvr.it/S72fVH