இரு ஆண்டுகளாகவே கொரோனாவுடன் இந்தியா தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டின் சில மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலங்கள் பட்டியல்… உத்தரப்பிரதேசம்: செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு வைரஸ் காரணமாக உத்தரபிரதேசத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். டெங்குவால் ஃபிரோசாபாத்தில் 67 பேர் இறந்துள்ளனர். 465 குழந்தைகள் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ரா மாவட்டத்தில் 35 பேருக்கும், கோரக்பூரில் ஆறு பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. ஹரியானா: பல்வால் மாவட்டத்தில் உள்ள ஹத்தின் நகரில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக, காய்ச்சல் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை ஊழியர்கள் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். மும்பை: ஜனவரி 2021 முதல் செப்டம்பர் மாதம் வரை 305 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 12 க்கு இடையில், மும்பையில் 85பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி: டெல்லியில் இதுவரை 158 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில் இந்த ஆண்டு 68 பேருக்கு மலேரியா பாதிப்பும் மற்றும் 40 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளன. தெலுங்கானா: தற்போதைய மழைக்காலங்களில் ஹைதராபாத், ரங்காரெட்டி மற்றும் மேட்சல் உள்ளிட்ட தெலங்கானாவின் நகர்ப்புற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பெரிய அளவில் அதிகரித்து காணப்படுகிறது. ஹைதராபாத்தில் கடந்த மூன்று வாரங்களில் 450 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மொத்தமாக கடந்த மாதம் 1,900 -க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப்படிக்க...உள்ளாட்சித் தேர்தலில் பணி செய்யவிடாமல் தடுக்கவே ரெய்டு - ஜெயக்குமார்
http://dlvr.it/S7hZY6
http://dlvr.it/S7hZY6