பிரபல மலையாள நடிகரான சுரேஷ்கோபி பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். கேரள மாநிலம் புத்தூர் பகுதியில் சூறைக்காற்றில் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. அதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய சென்றிருந்தார் சுரேஷ்கோபி. அப்போது ஒரு போலீஸ் எஸ்.ஐ தனது ஜீப்பில் அமர்ந்திருந்தார்.
எஸ்.ஐ-யை பார்த்த சுரேஷ்கோபி, "நான் எம்.பி-யாக்கும் கேட்டதா, மேயர் அல்ல. ஒரு சல்யூட் அடிக்கலாம். முறைகளை மறக்கக்கூடாது" எனக் கூறினார். உடனே ஜீப்பில் இருந்து இறங்கிய போலீஸ் எஸ்.ஐ சுரேஷ் கோபிக்கு சல்யூட் செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து சுரேஷ்கோபி சல்யூட் கேட்டு வாங்கியது தவறான செயல் என கேரள காவலர்கள் சங்கம் எதிர்ப்பை பதிவு செய்தது. இதையடுத்து நடிகரும், எம்.பி-யுமான சுரேஷ்கோபி ஒரு போலீஸ் எஸ்.ஐ-யிடம் சல்யூட் கேட்டு வாங்கியதாக பரபரப்பு கிளம்பியது. சுரேஷ் கோபி
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுரேஷ்கோபி, "நான் அங்கு சென்ற சமயத்தில் சாலையில் மரம் சாய்ந்து கிடந்தது. அங்கு சென்று 15 நிமிடங்கள் கழிந்தப் பிறகுதான் போலீஸ் ஜீப்பிற்குள் எஸ்.ஐ இருந்ததை பார்த்தேன். ஏன் இப்படி காரில் இருக்கிறீர்கள் நான் ஒரு எம்.பி, சல்யூட்டுக்கு தகுதி உள்ளவன் எனக் கூறினேன். மற்றபடி எஸ்.ஐ-யிடம் சல்யூட் செய்யும்படி கேட்கவில்லை. சல்யூட் என்ற நிகழ்வை முழுவதும் இல்லாமல் ஆக்க வேண்டும். யாருக்கும் சல்யூட் செய்ய வேண்டாம். இதில் உள்ள ஒரு அரசியல் பிரிவினையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால். இந்தியாவில் ஒரு அமைப்பு உள்ளது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சல்யூட்டை விவாதம் ஆக்கியது யார்? அந்த போலீஸ் அதிகாரி புகார் சொல்லவில்லை. போலீஸ் அசோசியேஷன் புகார் சொன்னதாகச் சொல்கிறீர்கள். போலீஸ் அசோசியேஷன் ஜனாநாயக அமைப்பில் கிடையாது. அந்த அசோசியேஷனை சுமக்க மக்களால் முடியாது. எம்.பி-க்கு சல்யூட் செய்ய வேண்டாம் என சொன்னது யார்? நடிகர் சுரேஷ்கோபி எம்.பி
பாரம்பர்ய நடைமுறை என்பது நாட்டின் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. டி.ஜி.பி-தான் போலீசுக்கு உத்தரவு வழங்க வேண்டியவர். அவர் இதுபற்றி கூறட்டும். சல்யூட் வழங்க வேண்டாம் என அவர்கள் சொல்வார்களானால் அதை நாடாளுமன்ற சேர்மனிடம் போய்ச் சொல்லட்டும்" என்றார் சுரேஷ் கோபி.
http://dlvr.it/S7l4QM
http://dlvr.it/S7l4QM