நடிகர் சோனு சூட் வீடு, அலுவலகம், அவr தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனம் போன்றவற்றில் வருமான வரித்துறை மூன்று நாட்களாக தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தது. மும்பை, லக்னோவில் நடத்தப்பட்ட இச்சோதனை விபரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. முன்னதாக சோனு சூட் டெல்லி முதல்வரைச் சந்திக்க, டெல்லி விளம்பர தூதராக அறிவிக்கப்பட்டார். எனவேதான் மத்திய அரசாங்கத்தால் இந்த சோதனை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சோனு சூட்
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருமான வரித்துறை, சோதனை நடத்தப்பட்ட விபரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சோனு சூட், அவருடன் சேர்ந்தவர்களும் சேர்ந்து ரூ.20 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளனர். கணக்கில் வராத பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் லக்னோவில் உள்ள நிறுவனங்களுக்கு கடனாக கொடுத்துள்ளார். அதோடு தனது தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்றதிலும் விதிகளை மீறியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சோனு சூட் அலுவலகம் அவர் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது. சோனு சூட் தன்னிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை பல போலி நிறுவனங்கள் மூலம் உத்தரவாதமற்ற கடன்களாக கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 20 முறை இது போன்ற பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனத்திடம் ரொக்க பணத்தை கொடுத்துவிட்டு, அந்த நிறுவனத்திடமிருந்து கடன் வாங்குவது போல் காசோலை பெற்றுள்ளார். அவ்வாறு பெறப்படும் நிதியை கொண்டு முதலீடு செய்தல், சொத்துக்கள் வாங்குவது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 20 கோடிக்கும் அதிமாக வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனு சூட்
கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் இதுவரை 18.94 கோடி நன்கொடை வசூலித்துள்ளனர். ஆனால் இதில் 1.9 கோடி மட்டுமே செலவிட்டுள்ளனர். எஞ்சிய நிதி செலவிடப்படாமல் வங்கிக்கனக்கில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து விதிகளை மீறி ரூ.2.1 கோடி நன்கொடை வசூலித்துள்ளார். லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சோனு சூட் பங்குதாரராக சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தில் சோனுசூட் கணிசமான நிதியை முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனத்திலும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுத்ததாக போலி பில் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
Also Read: கெஜ்ரிவாலுடன் சந்திப்பு... பஞ்சாப் தேர்தல்! - பாஜக-வால் குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சோனு சூட்?!
ரூ.65 கோடி அளவுக்கு இது போன்று போலி பில் தயாரித்துள்ளனர். லக்னோ நிறுவனம் ஜெய்ப்பூர் நிறுவனம் ஒன்றுடன் ரூ.175 கோடி அளவுக்கு பரிவர்த்தனை செய்துள்ளது. சோதனையின் போது ரூ.1.8 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 லாக்கர்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குர்காவ் போன்ற நகரங்களில் 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/S7phx7
http://dlvr.it/S7phx7