அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதைக் குறிவைத்து பாஜக சார்பில் `பிரபுத்த ஜன்' என்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், உன்னாவ் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய மாநில சட்டசபை சபாநாயகரான ஹிருதாய் நாராயண் தீக்ஷித், ``காந்தி மிகக் குறைவான ஆடை அணிந்திருந்தார். ஒரு வேட்டி மட்டுமே உடுத்தி வாழ்ந்தார். மக்கள் அவரை `பாபு' என்று அழைத்தனர். ஒருவர் தன் உடைகளைக் குறைப்பதன் மூலம் பெரிய மனிதராகிவிட முடியும் என்றால் நாட்டில் ராக்கி சாவந்த்தான் மிகப்பெரிய ஆளுமையாகக் கருதப்படுவார்" என்று கூறினார். தீட்ஷித் பேசும் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்கட்சிகளான சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸால் அது தீவிரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.ராக்கி சாவந்த்
Also Read: `வரதட்சணை பெறமாட்டோம்' உறுதிமொழி; மீறினால் பட்டதாரி சான்றிதழ் ரத்து! - கேரள பல்கலைக்கழகங்கள் அதிரடி
ராக்கி சாவந்த் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் ஒடியா உள்ளிட்ட மொழிகளில் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும், நடனக் கலைஞராகவும் இருந்து வருகிறார்.
காந்தி மற்றும் ராக்கி சாவந்தை ஒப்பிட்டு தான் பேசியதற்கு விளக்கம் அளித்த தீட்ஷித், ``எவரும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதனால் அறிவு ஜீவியாக மாறிவிட முடியது. அதே போல எவரும் காந்தி ஆகிவிட முடியாது என்றுதான் குறிப்பிட்டேன். இதனைச் சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என் ட்வீட் செய்தார்.
உன்னாவ் நிகழ்ச்சியில் இவர் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ``இந்தக் கருத்தின் மூலம், காந்தியை அவமதித்தது மட்டும் இல்லாமல் பெண்களையும் தீட்ஷித் அவமதித்துள்ளார். அவர்களுக்கு காந்தியைப் பிடிக்காது என்று தெரியும். அவர் தன் கருத்துக்கு மன்னிப்புக் கேட்டாக வேண்டும்" என்று கூறி `பொய்களின் மலர்' (jhooth_ka_phool) என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்தார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி வெளியிட்ட அறிக்கையில், ``பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு காந்தியை அவமதிக்கும் பழக்கும் இருக்கிறது. அவர்கள் சாவர்க்கரை நேசிக்கிறார்கள், காந்தியை வெறுக்கிறார்கள். சபாநாயகர் அவரது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டாக வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.Hriday Narayan Dixit
Also Read: ``பிடிச்சவங்க கன்னத்தைக் கடிக்குறது என் வழக்கம்; அது தப்பா?!" - டிவி சர்ச்சை குறித்து நடிகை பூர்ணா
இதற்கிடையில், தன்னைப் பற்றிய அடுத்தடுத்த சர்ச்சைப் பேச்சுகளால் மன வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார் நடிகை ராக்கி சாவந்த். முன்னதாக, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை, `பஞ்சாப் அரசியலின் ராக்கி சாவந்த்’ என்றார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராகவ் சதாவு.
இந்தப் பேச்சுகளால் கோபமுற்ற ராக்கி சாவந்த், ``உங்கள் அரசியல் சண்டைகளில் என் பெயரை எதற்காக இழுக்கிறீர்கள்?" என்று தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ராக்கி சாவந்தின் கணவர் வெளியிட்ட வீடியோவில், ``என் மனைவியின் பெயரைப் பயன்படுத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்வீர்கள்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/S87hW4