இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை ‘கூகுள்’ தேடுபொறி மூலமாக தேடி தெரிந்து கொள்வது வழக்கம். மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது கடந்த 1998-இல் தான். 1997-இல் கூகுள் பீட்டா வெர்ஷன் உருவாக்கப்பட்டது. இதே நாளில் 1998-இல் லேரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என இருவர் இணைந்து கூகுள் நிறுவனத்தை நிறுவினர். படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இணைய உலகின் சாம்ராட். பெரும்பாலான உலக மக்களின் ஒவ்வொரு அசைவும் கூகுளுடனே கடந்து கொண்டிருக்கிறது. இன்றுடன் கூகுள் நிறுவப்பட்டது 23 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அதனை தனது பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தனது ஹோம் பேஜில் டூடுல் போட்டு கொண்டாடி வருகிறது கூகுள். கேக் வடிவில் டூடுல் போட்டுள்ளது கூகுள்.
http://dlvr.it/S8PkjY
http://dlvr.it/S8PkjY