கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா(25) என்ற பெண்ணும் அடூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் சூரஜ்(27) என்பவரும் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது நூறு சவரன் தங்க நகைகள், பத்து லட்சம் ரொக்கப் பணம், மூன்றரை ஏக்கர் நிலம், சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. சூரஜ் மேலும் பணம் வேண்டும் எனக் கேட்டதால் உத்ரா-வின் பெற்றோர் மாதம் சுமார் எட்டாயிரம் ரூபாய் செலவுக்காக அனுப்பி வைத்துள்ளனர். சூரஜ் - உத்ரா தம்பதியினருக்கு இரண்டு வயதில் மகன் உண்டு. சூரஜ் வரதட்சணைக்கு ஆசைப்பட்டு உத்ரா-வை தொடர்ச்சியாக டார்ச்சர் செய்து வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் உத்ரா இயற்கையில் இறந்தது போன்று கொலை செய்துவிட்டு அவரின் பெற்றோர் கொடுத்த சொத்துக்களை அனுபவிக்கவும். அதன் பிறகு வேறு திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் கணக்கு போட்டுள்ளார். இதற்கான வழிகளை இணையதளத்தில் தேடியிருக்கிறார். அப்போது பாம்பு மூலம் உத்ராவை கொலை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.உத்ரா கொலை வழக்கு
இதற்காக யூ டியூப் இணையதளத்தில் பாம்புகள் குறித்த தகவல்களை தேடித் தேடி சேகரித்துள்ளார். மேலும் பாம்பு எங்கு கிடைக்கும் என இணையதளத்தில் தேடியபோது சுரேஷ் என்ற பாம்பு பிடிக்கும் நபரின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அவரிடம் இருந்து முதலில் அணலி வகை பாம்பை வாங்கி அதன் மூலம் உத்ராவை காலில் கடிக்க வைத்துள்ளார். உத்ரா அலறிய பிறகும் காலதாமதம் செய்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு உயிர் பிழைத்த உத்ரா பின்னர் அஞ்சலில் உள்ள பெற்றோர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி உத்ராவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த காரில் அஞ்சல் பகுதியில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கறுத்த தோள் பையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து கருமூர்க்கன் (கருநாகம்) பாம்பை கொண்டு சென்றுள்ளார். மனைவியை கொலை செய்வதற்காகவே பாம்பை பாம்புபிடிக்கும் சுரேஷிடம் 10,000 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். மனைவி வீட்டில் இரவு தங்கிய சூரஜ் யாரும் கவனிக்காத சமயத்தில் காரில் இருந்த பாம்பை எடுத்துக்கொண்டு உத்ரா இருக்கும் அறைக்குச் சென்றுள்ளார்.உத்ரா கொலை வழக்கு
2020 மே 7-ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பாம்பின் தலையைப் பிடித்து உத்ரா-வின் கையில் இரண்டுமுறை கடிக்க வைத்துள்ளார் சூரஜ். பின்னர் நேரம் விடியும்வரை காத்திருந்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவர் யாருக்கும் தெரியாமல் பாம்பு கொண்டுவந்த பாட்டிலை வெளியே வீசி எறிந்திருக்கிறார். உத்ராவின் தாய் மணிமேகலா அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தார். அலறியடித்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது உத்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Also Read: `குஞ்சு பொரிக்கப்பட்ட 10 பாம்பு முட்டைகள்!' -கேரளப் பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்
பாம்பு பசியாக இருந்தால் வெறித்தனமாக கடிக்கும் என இணையத்தில் தேடி கண்டுபிடித்த சூரஜ் கருநாகப்பாம்பை ஏழுநாட்கள் பட்டினியாக வைத்திருக்கிறார். கொலை நடப்பதற்கு முந்தையநாள் இரவு சூரஜிக்கு உத்ராவின் தாய் கொடுத்த பழச்சாறை அவர் குடிக்கவில்லை. மாறாக அந்த பழச்சாறில் மயக்க மருந்து கலந்து உத்ராவுக்கு கொடுத்துள்ளார். அதனால்தால் பாம்பு கடித்தபோது உத்ரா சத்தம் போடவில்லை. இரண்டுமுறை பாம்பைக் கொண்டு கடிக்க வைத்தபோதும் உத்ரா-வுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார் சூரஜ்.உத்ராவை கடித்த பாம்பு
உத்ராவை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்ற சமயத்தில் டாக்டரிடம் கையில் ஏதோ காயம் இருக்கிறது என அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்த சூரஜின் செயல்பாடு உத்ராவின் வீட்டினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சூரஜ் இணையதளத்தில் பாம்பு குறித்து தேடிய ஹிஸ்டரி, பாம்பு கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவை முகிய ஆதாரங்கள் ஆகின. உத்ராவை கடித்தபின் அந்த அறையில் பதுங்கி இருந்த பாம்பு அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது. பாம்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்தபோது அது ஏழுநட்கள் பட்டினியாக இருந்ததது கண்டறியப்பட்டது. அதுமட்டும் அல்லாது பாம்பை விற்பனை செய்த சுரேஷ் அப்ரூவராக மாறியது போன்றவை சூரஜ் கொலைக் குற்றம் செய்ததை நிரூபிக்க ஆதாரங்களாக அமைந்தன.
Also Read: `அணலி, கருமூர்க்கன்; நள்ளிரவு 2.30 மணி; பாட்டிலில் கொண்டுவரப்பட்ட பாம்பு’-கேரளாவை உலுக்கிய கொலை
கடந்த ஆண்டு நடந்த கொலையில் கைது செய்யப்பட்ட சூரஜ்-க்கு கோர்ட் ஜாமின் வழங்கவில்லை. இந்த நிலையில் சூரஜ் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த வழக்கின் தண்டனைகளை இன்று கொல்லம் ஆறாம் அடிஷனல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.மனோஜ் வழங்கிய தீர்ப்பில் சூரஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார். இந்தியாவில் இந்த சம்பவத்தையும் சேர்த்து பாம்பு மூலம் செய்யப்பட்ட கொலைகள் மூன்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்கள் வட இந்தியாவில் நடந்துள்ளன. அதில் சரியான ஆதாரங்கள் இல்லாததால் தண்டனை வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் கேரள போலீஸார் அறிவியல் ரீதியான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.பாம்பு பிடிக்கும் சுரேஷ்
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் மோகன்ராஜ் கூறுகையில், "இந்த வழகில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் பத்து ஆண்டுகள், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் ஆகியவை சில பிரிவுகளுக்கு வழங்கப்படுள்ளது. கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுள்ளது. 17 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்தபிறகுதான் ஆயுள்தண்டனையை அனுபவிக்க வேண்டும். சூரஜ் இளம் வயதுகாரர் என்பதாலும், இதற்குமுன்பு வேறு குற்றவழக்குகள் அவர்மீது இல்லை என்பதாலும் மரணதண்டனை விதிக்கப்படவில்லை" என தெரிவித்தார். இந்த நிலையில் மகளின் கொலை வழக்கு தீர்ப்பில் திருப்தி இல்லை என்றும். மகளை குரூரமான கொலை செய்தவருக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அப்பீலுக்குச் செல்லுவோம் எனவும் உத்ராவின் தாய் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/S9WXMX
http://dlvr.it/S9WXMX