கேரள மாநிலத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில பலர் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள், உடைமையை இழந்தவர்கள் என மக்கள் அடைந்த துயரம் ஏராளம். ஒட்டுமொத்த கேரளத்தையும் மறுசீரமைக்க வேண்டிய அளவுக்கு சர்வ நாசத்தை ஏற்படுத்தியிருந்தது கனமழை. 2019-ல் கவளப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மழை வெள்ளம் கேரளத்தை மிரட்டுகிறது. கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கூட்டிக்கல் பகுதியில் நேற்றைய கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இழுத்துச் செல்லப்பட்டன. சுமார் 14 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
Also Read: மும்பை: 2-வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை; நிலச்சரிவு! - 32 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கைதண்ணீரில் மூழ்கிய கேரள அரசு பஸ்
கோட்டயம் கூட்டிக்கல் பகுதிக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிகளில் வீடுகளை வெள்ளம் மூழ்கடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள மக்கள் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அவர்களைப் பாதுகாக்க விமானப்படையின் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. பூஞ்ஞாறு பஸ் ஸ்டாப் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது.
கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. அதுபோல இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவிலும், கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதிலும் என இறந்த ஆறுபேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீனச்சல், மணிமலை ஆறுகளில் தண்ணீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் காணாமல்போன 14 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.மண் சரிவால் சாலை துண்டிப்பு
இந்த நிலையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் மலையோர பகுதிகளில் வாகனப் போக்குவரத்து செயல்படுத்தக்கூடாது எனவும், வரும் 19-ம் தேதி வரை மழை தொடரும் என்பதால் அதுவரை சபரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று முதல் வரும் 21-ம் தேதிவரை நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S9kLKG
http://dlvr.it/S9kLKG