கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனின் மருமகனான முஹம்மது ரியாஸ் சமீபத்தில் சட்டசபையில் பேசும்போது, 'எம்.எல்.ஏ-க்கள் ஒப்பந்ததாரர்களை அழைத்துக்கொண்டு அமைச்சர்களை சந்திக்கச் செல்லக்கூடாது’ என பேசி பரபரப்பை கிளப்பினார். இதற்கு அவர் சார்ந்திருக்கும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு மற்றும் காசர்கோடு பகுதியில் சாலை பணியில் அலட்சியம் காட்டிய மற்றும் சாலைப்பணியை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்காமல் காலதாமதம் செய்த ஒப்பந்ததாரர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார் அமைச்சர் முஹமது ரியாஸ்.கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ்
தேசிய நெடுஞ்சாலை 766-ல் கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி புல்லனிமேடு பகுதியில் உள்ள வளைவான பகுதியை நவீனப்படுத்துவதற்காக நாத் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந்த பணிகளை கடந்த செப்டம்பர் மாதம் பொதுப்பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பணியின் ஒரு பகுதியை அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி இருந்தார் முஹம்மது ரியாஸ். ஆனால் ஒப்பந்ததாரர் பணியில் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.
Also Read: `எம்எல்ஏ-க்கள் ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சரை சந்திக்கக்கூடாது’ -சர்ச்சையான கேரள முதல்வர் மருமகன் பேச்சு
இதை அடுத்து ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் முஹமது ரியாஸ் உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்காத மற்றொரு ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் அமைச்சர் முஹம்மது ரியாஸ்.சாலைப்பணி
பேராம்பிறை- தானிக்கண்டி - சக்கிட்டப்பாறை சாலைப்பணிக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பணியை எம்.டி கன்ஸ்டெரக்ஷன் 2020 மே மாதம் 29-ம் தேதி பணியை தொடங்கியது. அந்த பணியை 9 மாதங்ளுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் முஹமது ரியாஸ் பணி நடக்கும் சாலையை நேரில் சென்று பார்வையிட்டார். பணியை விரைந்து முடிக்கும் படி அறிவித்திருந்தார். ஆனாலும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்பந்ததாரரை டெர்மினேட் செய்யவும் நடவடிக்கக் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://dlvr.it/SB4GNB
http://dlvr.it/SB4GNB