முப்படைத் தலைமை தளபதி பிபிவின் ராவத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த முப்படைத் தலைமை தளபதி பிபிவின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெலிங்கடன் ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சையில் உள்ள விமானப்படை கேப்டனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SF1Zn8
http://dlvr.it/SF1Zn8