உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த மாயாவதி கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக மாயாவதி பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அவரின் பகுஜன் சமாஜ் கட்சி உ.பி-யில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.அகிலேஷ் - மாயாவதி
ஏழுகட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில், அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அந்தக் கட்சியின் தலைமை அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதீஷ் சந்திரா மிஸ்ரா, மாயாவதி ``உ.பி-யில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார்" எனத் தெரிவித்திருக்கிறார். சதீஷ் சந்திரா மிஸ்ரா
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்ற தலைவர்கள் அனைவருமே தேர்தலைச் சந்தித்து சட்டப்பேரவைக்கு வராமல், சட்ட மேலவை உறுப்பினர்களாக அதாவது எம்.எல்.சி-யாக இருந்துவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: `பா.ஜ.க, காங்கிரஸுக்கு ஒரே வழிதான்!’ - பிறந்தநாளில் கட்சிகளை விமர்சித்த மாயாவதி
http://dlvr.it/SGzF2F
http://dlvr.it/SGzF2F