கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு. முன்னதாக, கேரளாவில் ஜன.15ஆம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 6 மாவட்டங்களுக்கு ஜன.14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SH3sRq
http://dlvr.it/SH3sRq