403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும்.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும், பா.ஜ.க - சமாஜ்வாடி இடையேதான் அங்கே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம். எல்.ஏ-க்கள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பது அரசியல் அரங்கில் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.அகிலேஷ் யாதவ்
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆளும் பா.ஜ.க-வை விட்டு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் விலகி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை உ.பி-யின் உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் எம்.எல்.ஏ-க்கள் முகேஷ் வர்மா மற்றும் வினய் ஷாக்யா ஆகியோரும் ராஜினாமா செய்தனர். மொத்தம் மூன்று அமைச்சர்கள், ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய அமைச்சர்களான, சுவாமி பிரசாத் மௌரியா, தரன் சிங் சைனி, பகவதி சாகர், வினை ஷாக்யா ஆகியோரும், பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷனால் வர்மா, முகேஷ் வர்மா, பிரஜேஷ் குமார் பிரஜாபதி, சவுத்ரி மற்றும் அமர்சிங் ஆகியோர் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தங்களை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பா.ஜ.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: உத்தரப்பிரதேசம்: பதவியை ராஜினாமா செய்த 3-வது பாஜக அமைச்சர்! - அகிலேஷ் யாதவ் உடன் சந்திப்பு
http://dlvr.it/SH6pBd
http://dlvr.it/SH6pBd