இந்தியாவில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காணொளி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் 125 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 40 சதவீத பெண்களும் 40 சதவீத இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Priyanka Gandhi
இந்த சட்டமன்ற தேர்தலில் மீரட்டின் ஹஸ்தினாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அர்ச்சனா கௌதம் போட்டியிட உள்ளார். நடிகை அர்ச்சனா கௌதம் பல்வேறு மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். இவர் 2021 -ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2015-ம் ஆண்டு 'தி கிராண்ட் மஸ்தி' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். பிறகு `மிஸ் பிகினி இந்தியா 2018’ என்ற பட்டத்தை வென்று இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் 'ஹசீனா பார்க்கர்', 'பாரத் கம்பெனி' போன்ற படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அர்ச்சனாவின் பெயர் அறிவிக்கப்பட்டதையொட்டி, நடிகை அர்ச்சனா பிகினி உடை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.அர்ச்சனா
இது குறித்து ஏ.என்.ஐ-க்கு இவர் பேட்டி அளிக்கும் போது பேசுகையில், ``நான் மிஸ் பிகினி 2018 -ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மேலும் நான் 2014 மிஸ் உத்தரபிரதேசம், மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018-ல் பரிசு வென்றிருக்கிறேன் . ஊடகத் துறையில் எனது தொழிலை எனது அரசியல் வாழ்க்கையுடன் இணைக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/SH97sW
http://dlvr.it/SH97sW