பாலி வடக்கன் எனும் மலையாள இயக்குநர், கடந்த டிசம்பர் 2-ம் தேதி பிரபல தனியார் மால் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பாலி மறுத்துள்ளார். பின்னர் அவர் வெளியே செல்லாதபடி கதவை மூடியுள்ளனர் அங்கிருந்த காவலர்கள். இதனையடுத்து 20 டிசம்பர் 2021 அன்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் பாலி.
அவர் தொடர்ந்த வழக்கில், ``மால்களில் உள்ள பார்க்கிங் பகுதி என்பது அங்கு வரும் பார்வையாளர்களுக்காக இருக்கும் ஒரு பொதுவான இடம். அதற்கென தனியாக பணம் வாங்க கூடாது. அப்படி பணம் வசூலிக்கலாம் என்று எந்தவொரு சட்டமோ விதிகளோ இல்லை. அப்படி குறிப்பிட்ட தனியார் மால் நிர்வாகம் பணம் வாங்குவது சட்டவிரோதமானது." என அவரின் வழக்கறிஞர் ஜோஸ் குறிப்பிட்டு வாதிட்டார்.நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 21,2021 அன்று நீதிபதி நாகரேஷ் தலைமையிலான அமர்வு கேரள மாநில அரசு, கலமசேரி முனிசிப்பாலிடி, தனியார் மால் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதன் பொருட்டு ஆஜரான வழக்கறிஞர் ஶ்ரீகுமார் கேரள முனிசிப்பாலிடி சட்டத்தின் 447 பிரிவின் கீழ் தனியார் மால் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் 14 ஜனவரி 2022 அன்று மீண்டும் இது விசாரணைக்கு வந்தது. இம்முறை நீதிபதி பி. வி. குன்ஹிகிருஷ்ணன் (P.V. Kunhikrishnan) விசாரணை நடத்தினார். அவர் தனது உத்தரவில், "இந்த வழக்கில் கலமசேரி முனிசிப்பாலிடியின் நிலை என்பது உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் தெளிவான விளக்கம் மற்றும் நிலைப்பாட்டினை இரண்டு வாரத்தில் (28.01.2022) தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "கட்டட விதிகளின்படி பார்க்கிங் பகுதி என்பது ஒரு கட்டடத்திற்குக் கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், இப்படிக் கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பார்க்கிங்க்கு அதன் ஓனர் கட்டணம் வசூலிக்கலாமா என்பதே. என்னுடைய கருத்து அதற்குச் சாத்தியமில்லை என்பது தான். " என்றார்.
தனியார் மால் நிர்வாகம் அவர்களுடைய சொந்த ரிஸ்கில் வேண்டுமானால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தற்போதைய நிலையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முடிவில் தான் அதற்கான உத்தரவு வரும்!
ப்ளாஷ் பேக்:
இதற்கு முன் நடந்த பார்க்கிங் கட்டண பற்றிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
1. போஸ்கா லூயிஸ் என்பவர் இதே நிறுவனத்திற்கு எதிராக இதே போன்ற வழக்கினை பதிவு செய்திருக்கிறார்.
2. கடந்த 2019-ல் குஜராத் உயர் நீதிமன்றம் பார்க்கிங்க்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், பார்க்கிங் பகுதி அங்கு வரும் மக்களுக்கான அடிப்படையான ஓர் பகுதி எனவும், அதனை இலவசமாக தான் தரவேண்டும். ஏனெனில் இது அவர்களின் சட்டரீதியான கடமை எனவும் தெரிவித்தது.
3. சென்ற வருடம் கர்நாடக உயர் நீதிமன்றம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயம் தான் என்று தன் கருத்தை தெரிவித்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
http://dlvr.it/SH9q3J
http://dlvr.it/SH9q3J