உத்தரப்பிரதேசத்தில் இரண்டுகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் அவரது முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த திங்கள்கிழமை உ.பி-யில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தபோது, ராஜா சிங் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ``பிப்ரவரி 10-ம் தேதி 55 தொகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 60.17% வாக்குகள் பதிவான நிலையில், யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பாதவர்கள், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அதிக அளவு வாக்களிக்க வந்ததாகக் தகவல்கள் வந்துள்ளன. ஏனென்றால் இரண்டாம் கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் 55 இடங்களில் நடைபெற்றத் தேர்தலில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளன.
எனவே, இது நமது மாநிலத்தில் ஆட்சியிலிருந்து யோகி ஆதித்யநாத்தை வெளியேற்றும் துரோகிகளின் சதி. இந்தச் சூழலை எதிர்க்க, இந்து சகோதர சகோதரிகளே மீதமுள்ள ஐந்து கட்டங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் அதிக எண்ணிக்கையில் வந்து உங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.டி.ராஜா சிங் முகநூலில் பேசிய வீடியோ-விலிருந்து
யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வர விரும்பாதவர்களுக்காக ஆயிரக்கணக்கான ஜே.சி.பி-க்கள் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் வாங்கப்பட்டுள்ளன. ஜே.சி.பி-க்கள் மற்றும் புல்டோசர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்.
யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பாத துரோகிகள், உ.பி-யில் வாழ வேண்டுமானால் யோகி... யோகி என்று முழக்கமிட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இல்லை என்றால் உ.பி-யை விட்டு ஓட வேண்டி இருக்கும்" என்று பேசியிருந்தார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.``கடந்த 5 வருடங்களில் கலவரங்கள், பயங்கரவாதங்கள் இல்லாத முதல் மாநிலம் உ.பி!" - யோகி ஆதித்யநாத்
http://dlvr.it/SK6zj9
http://dlvr.it/SK6zj9