கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்னை இன்று சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேசினார். அப்போது பேசிய அவர், ```கர்நாடகாவில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் முஸ்லிம் பெண்களை அவர்களுடைய வீட்டில் அடைக்கும் முயற்சி.ஹிஜாப் சர்ச்சை
கல்வி நிறுவனங்கள் சீருடை தொடர்பான விதிகளை கடைப்பிடிக்கலாம். இது நீண்ட காலமாக நடைமுறையிலிருந்து வருகிறது. ஆனால், ஹிஜாப் விவகாரம் சர்ச்சை ஒரு சதி என்பதுதான் என்னுடைய கருத்து. இது போன்ற பிரச்னைகள் முஸ்லிம் பெண்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. மேலும் பெண்களுக்குக் கல்வியின் மீதுள்ள ஆர்வத்தைக் குறைக்கும் முயற்சி'' என்றார். குஜராத்: ஹிஜாப் அணிந்து பள்ளிக்குத் தேர்வெழுத வந்த பெண்களுக்கு எதிர்ப்பு - இந்து அமைப்பினர் கைது!
http://dlvr.it/SLNJHw
http://dlvr.it/SLNJHw