மத்தியப் பிரதேசம் பர்கேடா பதானி பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கல் வீசித் தாக்குதல் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, ``ஜனவரி 15-ம் தேதிக்குள் மாநிலத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் தடியால் மதுக்கடைகளை அடித்து நொறுக்குவேன்" என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பர்கேடா பதானி பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நுழைந்த முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி மதுக்கடையினுள் கற்களை வீசினார். அதைத் தொடர்ந்து உமா பாரதி ஒரு வீடியோ பேசி வெளியிட்டிருந்தார்.மதுக்கடையில் கல் வீசும் முன்னாள் அமைச்சர் அமைச்சர் உமா பாரதி
அந்த வீடியோவில் அவர், ``பர்கேடா பதானி பகுதி காலனியில் ஏராளமான மதுபானக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் `அஹதா' எனும் தடை செய்யப்பட்ட இடத்தில் மதுபானம் வழங்கப்படுகிறது. இந்த கடைகளில் கூலித்தொழிலாளர்களின் பணம் வீணாகிறது. அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக இந்த மதுபானக்கடைகள் இருப்பதால் அந்தப் பகுதிவாசிகளும், பெண்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஏற்கெனவே பலமுறை இந்த கடைகளை மூடுவதாக நிர்வாகம் உறுதியளித்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக அது நடக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த கடைகளை மூடுமாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
This is Uma Bharti’s idea of staying relevant. pic.twitter.com/ePeYTXHD1v— Abhijit Majumder (@abhijitmajumder) March 13, 2022
இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு உமா பாரதி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து, மத்தியப் பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றக்கோரி கோரிக்கை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான அரசு வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 10 முதல் 13 சதவிகிதம் வரை குறைத்தது.மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்
மேலும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபானங்களை ஒரே கடையில் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்தியப் பிரதேசத்தில் 2,544 நாட்டு மதுபானக் கடைகளும், 1,061 வெளிநாட்டு மதுபானக் கடைகளும் உள்ளன.
மேலும், திராட்சை தவிர கருப்பு பிளம்ஸிலிருந்து ஒயின் தயாரிக்கவும் மது உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பை விட இப்போது நான்கு மடங்கு மதுபானங்களை மக்கள் வீட்டில் வைத்திருக்கலாம். ஆண்டு வருமானம் ரூ1 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் வீட்டிலேயே மதுக்கடை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உமா பாரதி
இது தொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், ``இந்தச் சம்பவம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க மீது குற்றம்சாட்ட எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால், மதுக்கடைகளைச் சேதப்படுத்துவதற்குப் பதிலாக, கலால் கொள்கைகள் உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் மீது அவர் கல்லெறிந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.ஹத்ராஸ் சம்பவம்: `அவப்பெயர்... சகோதரியாகச் சொல்கிறேன்!' - யோகி ஆதித்யநாத்துக்கு உமா பாரதி அட்வைஸ்
http://dlvr.it/SLfQCS
http://dlvr.it/SLfQCS