உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 1986 ஆம் ஆண்டு ரகுநந்தன் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கில் 1989-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரகுநந்தன் சிங் மேல்முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து ரகுநந்தன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பரோலில் வெளியாகி தலைமறைவான ரகுநந்தன் சிங் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் ஜெய்ஸ்வால், ``1989-ல் வழக்கிலிருந்து பரோலில் வெளியான ரகுநந்தன், தான் வசித்துவந்த கிராமத்திலிருந்த தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டுத் தலைமறைவாகி விட்டார். பின்னர் இந்த வழக்கில் ரகுநந்தனை கைது செய்ய உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.பாலியல் வன்கொடுமை
அதைத்தொடர்ந்து, ரகுநந்தனை கைது செய்வோருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு என அறிவித்தோம். ஆனால், ரகுநந்தனைப் பற்றி தகவலும் கிடைக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்தோம். இந்த நிலையில் தான், தலைமறைவாகிய ரகுநந்தன், புதிய போலி அடையாளத்துடன் டெல்லிக்குச் சென்றுவிட்டு, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி, 30 ஆண்டுகளுக்கு டெல்லியின் புராரி பகுதியில் மேலாக தன் மனைவியுடன் வசித்து வருவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து ரகுநந்தன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கைகளும், ஹத்ராஸ் காவல்நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரகுநந்தன் இறந்துவிட்டதாக நினைத்திருந்த நிலையில், ரகுநந்தன் உயிரோடிருப்பது அவரின் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.குஜராத்: பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை - காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
http://dlvr.it/SNVcXR
http://dlvr.it/SNVcXR