தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி.கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 50 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை கொண்டுவர முடியும் அது திமுக எம்.பி-களால் முடியாது என பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூரில், பாஜக சார்பில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது அவர் பேசும்போது...
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாக்களிக்க உள்ளனர். நிச்சயமாக தமிழகத்தில் 25 எம்பி-களை பெறுவது உறுதி. 25 எம்பிகள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 கேபினெட் அமைச்சர்களை போராடி பெற்றுத் தருவது என்னுடைய பொறுப்பு.
ஆனால் தமிழகத்தில் திமுக எம்.பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், பி.எஸ்.என்.எல் இலவச தொலைபேசி, 2 பி.ஏ-களுக்கு இலவச சம்பளம் மட்டுமே கிடைக்கும். இப்போது இருக்கும் எம்பிகளுக்கு இதுதான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை தவிர வேறு எதுவும் கிடைக்காது.
எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும். தற்போது எம்பிக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. தமிழக எம்பிகள் பேசினாலும் வேலை நடக்காது. எனவே வரக்கூடிய தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
http://dlvr.it/SNcHBT
http://dlvr.it/SNcHBT