கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த எலப்புள்ளி குப்பையோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபைர்(43). எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருந்துள்ளார். இந்த நிலையில், சுபைர் நேற்று முன் தினம் மதியம் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தன் தந்தை அபுபக்கரையும் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார். எலப்புள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சுபைரின் பைக் மீது திடீரென ஒரு கார் மோதி உள்ளது. பைக்கில் இருந்த சுபைரும், அவர் தந்தையும் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் எழுவதற்குள் காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் சுபைரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இரண்டு கார்களில் சென்ற கொலையாளிகள் ஒரு காரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சஞ்சித் என்பவர் பயன்படுத்திய கார் எனத் தெரியவந்துள்ளது. அதையடுத்து, இந்த கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புகள் குற்றம்சாட்டின.கொலை செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சுபைர்
இந்த நிலையில் பாலக்காடு மேலாமுறி பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சாரீரிக் பிரமுக் (உடற் பயிற்சியாளர்) ஆக இருந்த ஸ்ரீநிவாசன்(45) என்பவர் ஐந்துபேர்கொண்ட கும்பலால் நேற்று மதியம் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாலக்காட்டில் எஸ்.கே.எஸ் என்ற ஆட்டோ மொபைல் கடை நடத்தி வந்த ஸ்ரீநிவாசன் கடைக்குள் இருந்த சமயத்தில் மூன்று பைக்கில் வந்த ஐந்துபேர் கும்பல் அங்குச் சென்றுள்ளது. கடைக்குள் புகுந்த அந்த கும்பல் ஸ்ரீநிவாசனை வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கொலைக்கு எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புகளே காரணம் என பா.ஜ.க குற்றஞ்சாட்டியுள்ளது. பாலக்காட்டில் அரசியல் பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் மீண்டும் மோதல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக டி.ஜி.பி உத்தரவின் பேரில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் மதியம், நேற்று மதியம் என 24 மணி நேரத்தில் நடந்த இரண்டு கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆசாராம் பாபு ஆதரவாளர்களால் சிறுமி குடும்பத்துக்குத் தொடரும் கொலை மிரட்டல்
http://dlvr.it/SNjshs
http://dlvr.it/SNjshs