மும்பை தானே அருகில் உள்ள மும்ப்ராவை சேர்ந்தவர்கள் பைசல் மேமன் மற்றும் ஷேக் இப்ராகிம். இருவரும் பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். பைசல் வீட்டில் சட்டவிரோத பணம் இருப்பதாக கேள்விப்பட்ட 10 போலீஸார் கடந்த மாதம் 12-ம் தேதி அவரின் வீட்டில் நள்ளிரவில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 30 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 30 பாக்ஸ்களில் தலா ஒரு கோடி வீதம் இப்பணம் இருந்தது. அவை கறுப்பு பணம் என்று கூறி பணத்தை எடுத்து சென்றனர். இதையடுத்து இருவரும் போலீஸ் நிலையம் சென்று பணத்தை திரும்ப கேட்ட போது ரூ.2 கோடி கொடுத்தால் பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து எண்ணிப்பார்த்த போது 6 கோடி ரூபாயை போலீஸார் எடுத்திருந்தது தெரிய வந்தது.போலீஸார்
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் மற்றும் தானே போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் அனுப்பினர். அக்கடிதம் கடந்த மாதம் 25-ம் தேதி சமூக வலைத்தளத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் துணை கமிஷனர் அவினாஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில் 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் இந்த மோசடியில் தொடர்பு கொண்டு இருப்பது தெரிய வந்தது. . இதனையடுத்து தானே போலீஸ் கமிஷனர் ஜெய் ஜீத் சிங் விரைந்து செயல்பட்டு இன்ஸ்பெக்டர் கீதாராம் உட்பட 10 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு உதவி போலீஸ் கமிஷனர் அந்தாலே மற்றும் சீனியர் இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் மீது இலாகா பூர்வ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
http://dlvr.it/SQClBt
http://dlvr.it/SQClBt