மணக்கோலத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற மணமகன் மற்றும் மணமகள், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய முன் தினம் மணிகண்டன் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடைசி நேரத்தில் இப்படி ஆனதால், மிகுந்த மன கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார் மணிகண்டன். தந்தையின்றி தனது திருமணம் நடைபெறப் போகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார். தந்தை மட்டும் இல்லாமல் பிற உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நேற்று நாச்சியார்கோவில் மணிகண்டன் சுஜாலினி திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க... 'ஆன்லைன் கடன் அலெர்ட்' கடன் தருவதாக கூறி பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த ஊழியர்
தாலி கட்டி முடித்ததும், மணிகண்டன் உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தையார் செல்வமணியிடம் ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்ச்சி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
http://dlvr.it/SQRRDt
http://dlvr.it/SQRRDt