ஜம்மு-காஷ்மீர் எல்லைத் திட்டத்துக்கு எதிராகப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``ஜம்மு-காஷ்மீர் எல்லை நிர்ணய திட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்தவேண்டும். மேலும், பயங்கரவாதத்தின் உட்கட்டமைப்புகளை பாகிஸ்தான் உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.இந்தியா பாகிஸ்தான்
பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்தியப் பகுதிகளின் விவகாரங்களில் தலையிடவோ... இந்தியாவின் மற்ற உள்விவகாரங்களில் தலையிடவோ அது தொடர்பாக விவாதிக்கவோ பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லை நிர்ணயம் செய்வது என்பது விரிவான ஆலோசனை, பங்களிப்பு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக முயற்சி. ஆனால், பாகிஸ்தானில் உள்ள தலைமை தனது சொந்த வீட்டைச் சீரமைக்காமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதும், அடிப்படையற்ற மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதும் வருந்தத்தக்கதாக இருக்கிறது.காஷ்மீர்
மேலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organization of Islamic co-operation) இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு செயலகத்தின் வலியுறுத்தல்களை இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.``இம்ரானைக் கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்!" - ஷெபாஷை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
http://dlvr.it/SQX1GT
http://dlvr.it/SQX1GT