#BycottQatarAirways என்று பாஜகவினர் ட்ரெண்ட் ஆக்கிய ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும்கூட சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் கத்தாரில் உள்ள கடைகளில் இந்திய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி #BycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த டிரெண்ட் பதிவுகளை பார்க்கும் இணையவாசிகள் சிலர் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக லட்சக்கணக்கானோரால் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக், Boycott என்பதற்கு பதில் Bycott என எழுத்துப் பிழையுடன் உருவாக்கப்பட்டது. இது கேலிக்குள்ளான நிலையில் பின்னர் எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டது. மேலும் இந்த ட்ரெண்ட் குறித்து விமர்சித்துள்ள கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் சதேக், "தங்கள் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும் #BycottQatarAirways குறித்து மொட்டை மாடியில் நின்று இளைஞர் ஒருவர் வீடியோவை கலாய்க்கும் விதமாக அதனை ஸ்பூஃப் செய்து காமெடியாக வீடியோ வெளியிட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு மீம்ஸ்களும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.இதையும் படிக்கலாம்: இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்' - அல்கொய்தா மிரட்டல்
http://dlvr.it/SRqNPK
http://dlvr.it/SRqNPK