தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய கேப்டன் கேஎல் ராகுல் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய கேப்டன் கேஎல் ராகுல் விலகியுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். புதிய துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான முக்கிய குழுவில் இடம் பெறும் வகையில் பழைய மற்றும் புதிய வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய அணியின் தேர்வுக் குழு மிகக் கவனமாக பணியாற்ற வேண்டும்.
நாளை முதல் டி20 போட்டி புதுதில்லியில் தொடங்கும் நிலையில் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 12 டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்போட்டியை வென்றால் தொடர்ச்சியாக 13 போட்டிகளை வென்று வரலாறு படைக்க முடியும்.
http://dlvr.it/SRqxYG
http://dlvr.it/SRqxYG