மற்றொரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்த கணவனையும், அவரது காதலியையும் அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மனைவியின் செயல் சத்தீஸ்கரின் கொண்டகேன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது.
உரிபேண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஃபர்சகான் பகுதியில் உள்ள badgai என்ற கிராமத்தில் உள்ள பெண்ணுக்கும் தனது கணவனுக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருப்பதை அறிந்து கடந்த ஜூன் 11 அன்று அங்கு சென்று சோதனை இட்டிருக்கிறார்.
அப்போது அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமுற்ற அந்த மனைவி அவர்களை கையும் களவுமாக பிடித்து கடுமையாக தாக்கியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவர்களை அரைநிர்வாணமாக்கி தெருவெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார். இதனை அக்கிராமத்தினர் வேடிக்கை பார்த்ததோடு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பரப்பியிருக்கிறார்கள்.
அது தொடர்பான வீடியோ வைரலானதை அறிந்த கொண்டேகன் மாவட்ட எஸ்.பி., திவ்யாங் படேல் காவல்நிலைய குழுவை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார்.
அதன் பேரில் சம்பவம் நடந்ததை உறுதிசெய்த போலிஸார் கணவனையும், அவரது காதலியையும் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக மனைவி உட்பட நால்வரையும் கைது செய்து அவர்கள் மீது 354, 354 B, 509 A,B வழக்குப்பதிந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து பேசியுள்ள அப்பழங்குடியின கிராம தலைவர் மங்குராம் மன்ஜி, நடந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும், அது தொடர்பாக கிராம அளவில் விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் செய்தது வெட்கக்கேடான சம்பவம் என கூறியிருக்கிறார்.
http://dlvr.it/SSCzFw
http://dlvr.it/SSCzFw