ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `மத மாற்றத்தை தடுக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்!' என பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ சிவசரண் மதராசன்னையா குருபீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
அப்போது அவர்கள் முன்னிலையில் பேசிய மோகன் பகவத், ``மத மாற்றம் என்பது பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கிறது. மேலும், மதமாற்றம் ஒருவரை அதன் ஆதியிலிருந்து பிரிக்கிறது. எனவே, நாம் அனைவரும் மத மாற்றத்தைத் தடுக்க பாடுபட வேண்டும். இந்தியா இந்தியாவாகவே இருக்கவேண்டுமென்றால், கலாசார ரீதியாக நாம் எப்படி இருக்கிறோமோ, அதுவாகவே இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா இந்தியாவாக இருக்காது. தீண்டாமையும், சமத்துவமின்மையும்தான் இந்து சமூகத்தில் உள்ள பிரச்னை. இது மனதளவில் மட்டுமே உள்ளது, வேதத்தில் இல்லை. பல நூற்றாண்டுகளாக நம் மனதில் இருக்கும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண கால தாமதம் ஆகலாம். ஆனால், இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
அது மட்டுமல்லாமல், பெரியோர்களை மதித்தல், பெண்களைக் கண்ணியமாக நடத்துதல் போன்ற நம் இந்திய கலாசாரத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.``ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?'' - சித்தராமையா கேள்வி
http://dlvr.it/STpcTF
http://dlvr.it/STpcTF