உத்தரப்பிரதேச மாநிலம், காகோரி மாவட்டத்தில், 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி புரட்சிக்காரர்கள் ரயிலை நிறுத்தி ஆயுதங்களுடன் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``இந்தியாவின் பலம், ஒற்றுமை. மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும். 135 கோடி மக்கள் ஒன்றாகப் பேசும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதேபோல, ஜனநாயகத்தின் தாயாக உலகைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியா வழிநடத்திச் செல்கிறது. பிரதமருடன் யோகி ஆதித்யநாத்
சாதி, மதம், பிரதேசம் மற்றும் மொழிகளின் அடிப்படையில் நாம் பிளவுபடும்போது, அது நம்முடைய பலத்தை மட்டும் பிளவுபடுத்தவில்லை... இந்தியாவையும் பலவீனப்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில் எந்த மாதிரியான இந்தியாவை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பது குறித்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான வரைபடத்தைத் தயாரிக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார்'' என்றார். பறவை மோதியதால் தொழில்நுட்ப கோளாறு... உ.பி முதல்வர் யோகி பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!
http://dlvr.it/SWKjX6
http://dlvr.it/SWKjX6