உத்தரப்பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் காவல்துறை உணவகத்தில் வழங்கும் உணவு தரமில்லாமல் இருப்பதாக அழுது புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 2018-ம் ஆண்டு பேட்ச் காவலர். இவர் தற்போது ஃபிரோசாபாத் பகுதியில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், நேற்று, மனோஜ் குமார் உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் காவலர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, காவல்துறை துணை ஆணையருக்கு (டிசிபி) எதிராகச் சாலையில் உணவுத் தட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
A UP police constable posted in Firozabad district protests against the quality of food served at the mess in police lines. He was later whisked away. A probe has been ordered. pic.twitter.com/nxspEONdNN— Piyush Rai (@Benarasiyaa) August 10, 2022
இதை அங்கிருந்த சிலர் தங்கள் மொபைலில் வீடியோ பதிவு செய்திருக்கின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ``உணவுத் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. விலங்குகள்கூட சாப்பிட முடியாது. இது தொடர்பாகக் காவல்துறையில் யாரும் எங்கள் புகாரைக் கேட்கத் தயாராக இல்லை. இது குறித்துப் பேசினால் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டி.ஜி.பி-யிடம் புகார் செய்ய முயன்றபோது, தொலைபேசி இணைப்பைத் துண்டிக்குமாறு கடிந்துகொள்கிறார். பணிநீக்கம் செய்துவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இது மாதிரியான அழுத்தங்கள் காரணமாகத்தான் காவலர்கள் பலர் தற்கொலை செய்துகொள்கிறாரகள்" எனக் குமுறுகிறார் அந்தக் காவலர் மான்ஜோ குமார்.
Up Police Constable Crying & Protests Against Quality Of Food Served At d Mess In Police Line – #firozabad #UPPolice
.
.
.
.
.
.
.#Shameful #YogiAdityanath #ModiGovt #HarGharTiranga2022 #GharGharTiranga #IndiaAt75 #Congress #USA #India #Delhi #government pic.twitter.com/if7oihnGBc— Bunty.Sw (@SwBunty) August 10, 2022
இந்த வீடியோ மாநிலக் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு காவலர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கின்றனர். அதனடிப்படையில் மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது உணவின் தரம் குறித்து குற்றம்சாட்டியிருக்கும் காவலர் மனோஜ்மீது இதுவரை 15 முறை துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.போலீஸாரிடமே அபராதம் வசூலித்த போலி போலீஸ்... கைதுசெய்த காவல்துறை! - நடந்தது என்ன?
http://dlvr.it/SWRKdF
http://dlvr.it/SWRKdF