மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா கடந்த மாத தொடக்கத்தில் இரண்டாக உடைந்துவிட்டது. அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று பாஜக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தாலும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சி கட்டமைப்பு வசதி இல்லாமல் இருக்கிறது. இதனை உருவாக்கும் பணியில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதோடு ஏக்நாத் ஷிண்டே தங்களது அணிக்கு மும்பையில் புதிய அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளனர். அதுவும் சிவசேனா தலைமை அலுவலகம் இருக்கும் தாதரில் அதனை திறக்க முடிவு செய்துள்ளனர். சிவசேனா பவன் அருகிலேயே அதனை திறக்க பணிகள் நடந்து வருவதாக ஏக்நாத் ஷிண்டே அணியில் இடம் பெற்று இருக்கும் எம்.எல்.ஏ. சதா சர்வான்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ``தாதரில் ஏற்கனவே இருக்கும் சிவசேனா பவன் அருகில் புதிய அலுவலகத்தை திறக்க இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டே
இது போட்டி சேனா பவன் கிடையாது. பொதுமக்களின் பிரச்னையை தீர்ப்பதற்கான இடமாக இருக்கும். மும்பை தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் முதல்வரின் அலுவலமாக இருக்கும். முதல்வர் ஷிண்டே தாதரில் அலுவலகம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். எனவே இந்த அலுவலகம் இன்னும் 15 நாட்களில் திறக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அலுவலகம் திறக்கப்படும். அதே போன்று மும்பையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு அலுவலகம் திறக்கப்படும். நாங்கள் சிவசேனா பவனுக்கு உரிமை கோரப்போவதில்லை. எனவே அதே போன்ற ஒன்று எங்களுக்கு தேவையில்லை. முதல்வர் ஷிண்டே மும்பைக்கான கட்சி நிர்வாகிகளை விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்தார். ஏற்கனவே தங்களது அணிக்கு சிவசேனாவின் வில் அம்புவை ஒதுக்கவேண்டும் என்று கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/SWYh1Q
http://dlvr.it/SWYh1Q