தற்போது 10,000 ரூபாய்க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமி இந்தியா தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Xiaomi நிறுவனம் ஏற்கனவே இந்தியச் சந்தையில் 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் 5ஜி சேவைகளை வெளியிடத் தொடங்கும் போது, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வரவேற்பைப் பொறுத்து, பெரும்பாலான இந்திய நுகர்வோர் வாங்கக்கூடிய 5G ஃபோன்களை Xiaomi சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சியோமி இந்தியா தலைவர் முரளிகிருஷ்ணன் பி, “பண்டிகை காலம் துவங்கும்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் வரவு அதிகரிக்கத் துவங்கும். நாங்களும் எங்களது பண்டிகை விற்பனைக்கு தயாராகி வருகிறோம். பல்வேறு வகையான ஃபோன்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகளும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் விரைவில் 5G சேவைகளை வெளியிட உள்ளதால், 5G சாதனங்களுக்கான தேவையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்போம். குறிப்பாக பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில்! 15-20 ஆயிரம் விலைப்பிரிவில் 2-3 வருடங்கள் நீடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை தொழில்நுட்ப பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கத்துவங்குவர். இருப்பினும் பெரும்பாலான இந்தியர்கள் 10-15 ஆயிரம் விலைப்பிரிவில் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கவே விரும்புவர்.” என்று தெரிவித்தார்.
Realme போன்ற பிராண்டுகள் 10,000 ரூபாய் பிரிவின் கீழ் 5G போன்களை விரைவில் வெளியிடுவதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அத்தகைய மலிவு விலை 5G போன்களை சியோமி எப்போது வெளியிடும் என்று கேட்டபோது, “அது பொருளாதார அளவைப் பொறுத்தது. இந்தாண்டு இறுதியில் சிப்செட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். எனவே 10 ஆயிரத்திற்குள் 5ஜி ஸ்மோர்ட் போன்களை வெளியிடச் சிறிது காலம் எடுக்கும். தற்போது அதற்கு வாய்ப்பில்லை” என்று முரளிகிருஷ்ணன் தெரிவித்தார்.
http://dlvr.it/SY3TvK
http://dlvr.it/SY3TvK