உடலில் வேறு எந்த பகுதியில் வரும் பிரச்னைகளை காட்டிலும் தலையில் ஒரு பிரச்னை என்று சொன்னாலே தலையே சுற்றிவிடும். அதிலும் மூளையில் கட்டி என்று சொன்னால் பயப்படாதவர்கள் இருக்கமுடியாது. மூளைக்கட்டிகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால் குணப்படுத்த முடியும்.
அதேபோல் மூளையில் உருவாகக்கூடிய கட்டிகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவை malignant என்று சொல்லக்கூடிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கேன்சர் கட்டிகளாகவும் அல்லது benign என்று சொல்லக்கூடிய கேன்சர் அல்லாத கட்டிகளாகவும் இருக்கலாம். தலையில் கட்டி உருவாகி இருக்கக்கூடிய இடம் மற்றும் அது நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றை பொருத்து கட்டிகளின் வளர்ச்சியும் மாறுபடலாம். Meningioma என்பது பெரும்பாலும் 30% பேருக்கு வரக்கூடிய மூளைக்கட்டி வகை. இந்த கட்டிகள் எப்படி வளர்கிறது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
மூளையில் எங்கு வேண்டுமானாலும் Meningioma வளரலாம்
இந்த கட்டியானது மூளை மற்றும் தண்டுவட செல்களிலிருந்து உருவாகின்றன. மூளை மற்றும் தலைக்குள் இந்த கட்டிகள் அழுத்தத்தை கொடுப்பதால் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதனால் மூளைக்கட்டி வந்தோருக்கு தீவிர தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
கட்டியின் அளவு மற்றும் அமைப்பிடம் பொருத்து அறிகுறிகள் மாறும்
Meningiomas கட்டிகள் செரிப்ரோஸ்பைனல் திரவத்தின் ஓட்டத்தைத் தடுக்கலாம், இதன் விளைவாக நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது. கட்டிகளின் அளவு மற்றும் அது எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது போன்றவற்றை பொருத்து அதன் அறிகுறிகள் மாறுபடும். தலைவலியைத் தவிர, பார்வையிழப்பையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
தற்செயலாக கண்டறியப்படலாம்
பெரும்பாலும் மற்ற பிரச்னைகளுக்காக தலையில் எம்.ஆர்.ஐ அல்லது சி.டி ஸ்கேன் செய்யப்படும்போதுதான் மருத்துவர்கள் Meningioma கட்டிகளை கண்டறிகின்றனர். அதனையடுத்து எடுக்கப்படும் சோதனைகளின் முடிவைப் பொருத்தே அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டுமா அல்லது தள்ளிப்போடலாமா என்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Meningioma கட்டிகள் பரவாது
கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கூட, பெரும்பாலும் உடலின் மற்றப்பகுதிகளுக்கு Meningioma கட்டிகள் பரவாது என்கின்றனர் மருத்துவர்கள்.
அறுவைசிகிச்சை தேவையில்லை
Meningioma கட்டிகள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்க அறுவைசிகிச்சை செய்யவேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். அப்படி இல்லாதபட்சத்தில் கிரானியோடோமி சிகிச்சை மூலம் கட்டிகளை மருத்துவர்கள் நீக்குகின்றனர். மூளையில் சிறிய அளவில் வந்திருந்தாலும், ஆழமான இடத்தில் கட்டிகள் உருவாகி இருந்தாலும் அவற்றை நீக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் தற்போது உள்ளன. அதில் ஒன்று கேமரா-உதவி குழாயை உள்ளடக்கியது. இதில் தலையில் சிறிய துளையிட்டு, மூளை திசுக்களை மெதுவாக நகர்த்தி, குறைந்த காயத்துடன் கட்டியை நீக்க முடியும். எனவே நோயாளிகள் வேகமாக குணமடைய முடியும்.
http://dlvr.it/SYBTHQ
http://dlvr.it/SYBTHQ