காங்கோ நாட்டை சேர்ந்த ஒருவர் போதைப்பொருளை விழுங்கிவிட்டு மும்பை வருவதாக கடந்த 2-ம் தேதி விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அன்றைய தினம் மும்பை விமான நிலையத்தில் அல்பா வம்பா(54) என்பவரை கைது செய்த அதிகாரிகள் அவரை ஜெ.ஜெ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் வயிற்றில் 116 போதைப்பொருள் நிரப்பப்பட்ட பெரிய மாத்திரைகள்(கேப்சியூல்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ அளவுக்கு மட்டுமே போதைப்பொருள் மாத்திரைகளை கடத்தல்காரர்கள் விழுங்குவது வழக்கம். ஆனால் அல்பா 1.6 கிலோ எடையுள்ள கோகைன் என்ற போதைப்பொருளை விழுங்கி இருந்தான். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடியாகும். அவற்றை ஆபரேசன் செய்து எடுக்க ஆரம்பத்தில் டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் டாக்டர் அஜய் ஆலோசனையின் பேரில் லேப்ராஸ்கோபிக் முறையில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட மாத்திரைகளை வெளியில் எடுக்க முடிவு செய்தனர். கடந்த 15 நாள்களாக டாக்டர்கள் கடுமையாக போராடி 115 போதைப்பொருள் மாத்திரைகளை உடம்பில் இருந்து வெளியில் எடுத்துவிட்டனர். கைது
ஆனால் ஒரு மாத்திரை மட்டும் வெளியில் வராமல் மிகவும் சிக்கலான இடத்தில் மாட்டிக்கொண்டது. அதனை வெளியில் எடுக்க வயிற்று பகுதியில் துளை போட்டனர். அதில் ஒரு துளையில் கேமராவை செலுத்தவும், ஒரு துளையில் உபகரணத்தை செலுத்தவும், மற்றொரு துளை வழியாக போதை மாத்திரையை எடுக்க என மொத்தம் மூன்று துளைகள் போட்டனர். பின்னர் டாக்டர்கள் போராடி 45 நிமிடத்தில் அந்த போதைப்பொருள் மாத்திரையை வெளியில் எடுத்தனர். திடீரென போதை மாத்திரை வயிறு வெளியேற்றும் அமிலம் மூலம் உருகுவதற்கான வாய்ப்பு இருந்தது. அப்படி உருகினால் உடனே மரணம் சம்பவிக்ககூடிய அபாயம் இருந்தது. அப்படி இருந்தும் மிகவும் எச்சரிக்கையுடன் டாக்டர்கள் 16 நாட்கள் போராடி போதை மாத்திரைகளை உடம்பில் இருந்து எடுத்தனர்.
http://dlvr.it/SYV1jb
http://dlvr.it/SYV1jb