கடந்த சில நாள்களாக இந்தியாவிற்குள் போதைப்பொருள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்புதான் பாகிஸ்தானில் இருந்து கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ.1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் கடற்கரையிலும் இரண்டு நாள்களுக்கு முன்பு ரூ.350 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் சமீப காலமாக அடிக்கடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த போதைப்பொருள்கள் ஆப்கான், ஈரான், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகிறது. இந்தியாவில் போதைப்பொருளின் தேவை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள்.
தற்போது ஆப்பிள் கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பை அருகில் உள்ள ஜெஎன்பிடி துறைமுகத்திற்கு கன் டெய்னரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 5-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. குஜராத்தில் பிடிபட்ட ரூ.350 போதைப்பொருள்
இதையடுத்து அதிகாரிகள் துறைமுகத்தில் சோதனை செய்து சந்தேகத்திற்கு இடமான கன்டெய்னரை கண்டுபிடித்தனர். அதனை திறந்து பார்த்தபோது உள்ளே பச்சை ஆப்பிள் இருந்தது. ஆனால் ஆப்பிளின் மத்தியில் தனி அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் கொகைன் போதைப்பொருள் பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 50.2 கிலோ போதைப்பொருள் இருந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.502 கோடியாகும். இந்த கண்டெய்னரை யெம்மிடோ இண்டர்நேசனல் புட்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விபின் வர்கீஸ் இறக்குமதி செய்திருந்தார். ஏற்கனவே ஆரஞ்ச் பழ பெட்டிகளில் போதைப்பொருளை கடத்தியதாக வர்கீஸ் கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது ஆப்பிள் கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்தியதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பிள் கன்டெய்னருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தனது நண்பர் மன்சூர் மூலம் வர்கீஸ் ஆர்டர் செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் நவிமும்பை வாஷியில் லாரி ஒன்றை மறித்து சோதனை செய்த போது ரூ.1,426 கோடி மதிப்பிலான போதைப்பொருள் ஆரஞ்ச் பழ பெட்டியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவை தென்னாப்பிரிக்காவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. வெளிநாட்டு பிரஜைகள் போதைப்பொருளை மாத்திரை வடிவத்தில் வயிற்றுக்குள் மறைத்து இந்தியாவிற்குள் கொண்டு வருகின்றனர். தற்போது கப்பலில் பழங்களில் போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரப்படும் நிகழ்வுகளும் தொடங்கி இருக்கிறது.
http://dlvr.it/SZpVvf
http://dlvr.it/SZpVvf