கேரள மாநிலத்தில், ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் தொடர்ந்துவருகிறது. ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால், அமைச்சர்களின் பதவியைத் திரும்பப்பெறுவேன் என ஆளுநர் ஆரிப் முகமது கான் ஏற்கனவே அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார். அடுத்ததாக 11 துணைவேந்தர்கள் நியமனத்தில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களைப் பதவி விலக வேண்டும் என ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், தன்னிடம் தெரிவிக்காமல் முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுவந்ததாக பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் கடிதம் எழுதி, பரபரப்பைப் கிளப்பியிருக்கிறார். முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 3-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை கனடா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்தார். முதல்வருடன் அமைச்சர்களான வி.சிவன்குட்டி, பி.ராஜிவ், வீணா ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் சென்றிருந்தனர். வெளிநாட்டுப் பயணம் பற்றி முதல்வர் பினராயி விஜயன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதியிருப்பது அரசுக்குப் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.பினராயி விஜயன்
ஆளுநர் ஆரிப் முகமதுகான் எழுதிய கடிதத்தில், "முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்குச் சென்ற சமயத்தில் ஆளுநர் என்ற முறையில் என்னிடம் முறைப்படித் தகவல் தெரிவிக்கவில்லை. இது சட்டத்தை மீறும் செயலாகும். பிரதமர் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பு ஜனாதிபதியையும், முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பு ஆளுநரையும் நேரில் சந்தித்து பயணம் குறித்தும், அதன் முக்கிய அம்சம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து வந்த பிறகும் நேரில் சந்தித்து, பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் குறித்துத் தெரிவிக்க வேண்டும். ஆனால் பத்து நாள்கள் பயணமாக, நான்கு நாடுகளுக்கு சென்று வந்த பினராயி விஜயன் என்னைச் சந்தித்துப் பேசவில்லை. அவர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது பொறுப்பு முதல்வர் யார் என என்னிடம் அறிவிக்கவில்லை. எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயனின் வெளிநாட்டுப் பயணம் பற்றி மத்திய வெளியுறவுத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியிருந்தார். இதையடுத்து பினராயி விஜயன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதற்கான கடிதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு முரளிதரன் அமைதியானார். ஆரிப் முகமது கான்
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது முதல்வர் பதவிக்கு எனப் பொறுப்பாக யாரையும் நியமிப்பது வழக்கம் இல்லை எனக் கூறப்படுகிறது. பினராயி விஜயன் இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோதும் தகவல் தெரிவிக்கவில்லை என ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநரின் கடிதம் குறித்து முதல்வர் தரப்போ, ஆளும் சி.பி.எம் தரப்போ இதுவரை பதில் கூறவில்லை. மேலும், இது குறித்து பினராயி விஜயன் தரப்பு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.கேரளா: ஆளும் சிபிஎம் கட்சிக்கே தெரியாமல் கொண்டுவரப்பட்ட ஓய்வுத் திட்டம் - வாபஸ் பெற்ற பினராயி விஜயன்
http://dlvr.it/ScQ4LT
http://dlvr.it/ScQ4LT