கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தில் வசிப்பவர் ஓம்கார் கவுடா. இவர் மகள் மாற்று சாதியைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்துவந்தார். இது குறித்து ஓம்காருக்குத் தெரியவந்தவுடன், காதலைக் கைவிடும்படி தன் மகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மகள் காதலைக் கைவிடவில்லை. இதனால் தன் மகள்மீது ஓம்கார் கடும் கோபத்தில் இருந்தார். சம்பவத்தன்று மாலையில் தன் மகளிடம் சினிமா பார்க்கச் செல்லலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் இருவரும் புறப்பட்டு சினிமாவுக்குச் சென்றனர். சினிமா தியேட்டருக்குச் சென்றபோது அதிக நேரமாகிவிட்டதால் படம் ஏற்கெனவே திரையிடப்பட்டிருந்தது. எனவே, அங்கிருந்து ஓம்கார் தன் மகளைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அவர் மகள் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றி வாங்கிக்கொண்டார். பின்னர் ஓம்கார் தன் மகளை அங்கிருக்கும் கால்வாய் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். கால்வாயைப் பார்க்கச் சொல்லிவிட்டு அதில் தன் மகளைப் பிடித்துத் தள்ளிவிட்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் மகள் உதவி கேட்டுக் கத்தினார். ஆனால் உதவி செய்யாமல் அங்கிருந்து திருப்பதிக்குச் சென்றுவிட்டார். ஓம்கார் மகள் தண்ணீரில் மூழ்கி இறந்துபோனார். மகளும் கணவரும் வீடு திரும்பாததால் ஓம்கார் மனைவி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இந்த நிலையில், ஓம்கார் நேற்று மாலை திடீரென வீட்டுக்கு வந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது தன் மகளை தண்ணீரில் தள்ளிக் கொலைசெய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அவரைக் கைதுசெய்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.`லவ்' டார்ச்சரால் விஷம் குடித்த கல்லூரி மாணவி... தந்தைக்குக் கொலை மிரட்டல்! - சேலத்தில் பரபரப்பு
http://dlvr.it/ScXH2B
http://dlvr.it/ScXH2B