கர்நாடகாவில், ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஏடிஸ் (Aedes) வகை கொசுவால்தான் ஜிகா வைரஸ் பாதிப்பு உண்டாகிறது. மிக சுலபமாகக் கொசுக்களின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். இந்த வைரஸ் முதன்முதலில் 1947ம் ஆண்டில், உகாண்டா நாட்டில் கண்டறியப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில், உலகளவில் ஜிகா வைரஸ் பரவி ஆயிரக்கணக்கானவர்களை, குறிப்பாக கர்ப்பிணிகளை அதிகளவில் பாதித்தது. கொசுபன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியா வரிசையில் ஜிகா வைரஸ் காய்ச்சல்- அலர்ட்!
இந்த நிலையில், கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதேபோல், மேலும் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில், சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்த சிறுமியை தீவிர கண்காணிப்பில் வைத்து தொடர் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. மேலும், ராய்ச்சூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து, கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் கூறும்போது, ``ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள சிறுமிக்கு கடந்த 15 நாள்களாக காய்ச்சல், வாந்தி - பேதி இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் ரத்த மாதிரிகள், புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. இதில், ஜிகா வைரஸ் பாதிப்பு சிறுமிக்கு இருப்பது உறுதியானது.ஜிகா வைரஸ்`கர்ப்பிணிகளை பாதிக்கும் ஜிகா வைரஸ் மீண்டும் பரவலாம்!' - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
சிறுமிக்கு இந்த பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அந்த சிறுமி சென்று வந்த இடங்கள், அவருடன் இருந்தவர்கள் உள்ளிட்டோர் விவரங்கள் சேகரிப்பட்டு வருகின்றன. குழந்தையின் பெற்றோரது ரத்த மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த சிறுமியைத் தவிர, இதுவரை வேறு யாருக்கும் மாநிலத்தில் புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. எனினும், அரசு கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SfL5VH
http://dlvr.it/SfL5VH