கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. கர்நாடகாவில் அமைந்திருக்கும் பெல்காம் உட்பட சில இடங்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிமை கோரிவருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் இந்த வழக்கைத் திறம்படக் கையாள மகாராஷ்டிரா அரசு எல்லைப் பிரச்னை ஒருங்கிணைப்பு கமிட்டியை மாற்றியமைத்தது. இதனால் ஓய்ந்திருந்த எல்லைப் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மற்றும் கன்னடர்கள் அதிகம் வசிக்கும் சில மகாராஷ்டிரா கிராமங்களுக்கு கர்நாடகா அரசு உரிமை கோரும் என்று அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
இதனால் மகாராஷ்டிரா அமைச்சர்கள் இரண்டு பேர் சர்ச்சைக்குரிய பெல்காம் பகுதிக்குச் செல்லப்போவதாக அறிவித்தனர். உடனே பெல்காமில் வன்முறை ஏற்பட்டது. மகாராஷ்டிரா பேருந்துகள் கன்னட அமைப்பினரால் கல்வீசித் தாக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிடவேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இரு மாநில முதல்வர்களும் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினர். மகாராஷ்டிரா தரப்பில் முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். கன்னட அமைப்பு போராட்டம்
கர்நாடகா தரப்பில் முதல்வர் பொம்மை மற்றும் உள்துறை அமைச்சர் ஞானேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு மாநில உறுப்பினர்கள் ஆறு பேர்கொண்ட கமிட்டியை அமைக்கலாம் என்று அமித் ஷா ஆலோசனை வழங்கினார். அதோடு இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் எந்தப் பகுதிக்கும் உரிமை கோரக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த அமித் ஷா, "இது போன்ற பிரச்னைகளுக்கு தெருக்களில் தீர்வு காண முடியாது. அரசியல் சாசனப்படிதான் தீர்வு காணப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இரு மாநிலங்களும் காத்திருக்க வேண்டும். ஆறு அமைச்சர்களைக்கொண்ட கமிட்டியை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகா தலைவர்கள் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு திறக்கப்பட்டு, மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகா எல்லைப் பிரச்னையில் இட்லி, தோசை புறக்கணிப்பு: புனேயில் சரத் பவார் கட்சி போராட்டம்!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
சமீபத்திய அரசியல் பதற்றத்தை அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கர்நாடகா முதல்வர் பொம்மை பெயரில் போலி ட்விட்டர் கணக்கு திறக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே தெரிவித்தார். போலி ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொம்மை உறுதியளித்திருக்கிறார். இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்" என்றார்.
``இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு" என்று ஷிண்டே தெரிவித்தார். பட்னாவிஸும், ``வாகனங்கள்மீது தாக்குதல் நடத்தி மகாராஷ்டிரா எந்தவிதப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. சில அமைப்புகள் பிரச்னையை ஏற்படுத்திவிட்டதாக பொம்மை தெரிவித்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் மாநிலத்தில் இருக்கும் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்"என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.குஜராத் கலவரம்: ``அமித் ஷா பேசியதில் எந்தத் தவறுமில்லை" - தேர்தல் ஆணையம் பதில்
http://dlvr.it/SfSKYr
http://dlvr.it/SfSKYr