பாகிஸ்தானில் கடுமையானப் பொருளாதார நெருக்கடியும், உணவு நெருக்கடியும் மக்களை வாட்டி வதைத்துவருகின்றன. அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதால் மக்கள் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கில்ஜித் பால்டிஸ்தானை (G-B) இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.கில்ஜித் பால்டிஸ்தான் மக்கள் போராட்டம்
ஜம்மு-காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்ஜித்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டு, அதைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறிவருகிறது. ஆனால், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கில்ஜித்-பால்டிஸ்தானில் கடந்த 12 நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அந்தப் போராட்டத்தில் கார்கில் சாலையை மீண்டும் திறப்பதற்கும், இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள கார்கில் மாவட்டத்தில் சக பால்ட்டிகளுடன் மீண்டும் இணைவதற்கும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
போராட்டத்தின்போது அந்தப் பகுதி மக்கள், ``பாகிஸ்தான் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துவருகிறது. இந்தப் பகுதியின் இயற்கை வளங்களைச் சுரண்டுவது உள்ளிட்ட பல பிரச்னைகளைச் செய்துவருகிறது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.கில்ஜித் பால்டிஸ்தான் மக்கள் போராட்டம்
இந்தப் பகுதியில், நிலம் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. கில்ஜித் -பால்டிஸ்தான் பகுதி நிலங்களைப் பாகிஸ்தான் அரசைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கில்ஜித்-பால்டிஸ்தான் நிர்வாகம், ``இந்த நிலம் பாகிஸ்தான் அரசைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும் மாற்றப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராகப் பரவலான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.`பஞ்சத்தில் பரிதவிக்கும் மக்கள் - திவாலாகும் பாகிஸ்தான் மீள வாய்ப்புண்டா?'
http://dlvr.it/SgsPX6
http://dlvr.it/SgsPX6