மியான்மரில் தேர்தலுக்கு முன்னதாக சூகியின் தேசிய ஜனாயக லீக் கட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு ஆண்டுக்கால ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவ ஆட்சியால் நியமிக்கப்பட்ட மியான்மர் தேர்தல் ஆணையம், பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் கட்சியைக் கலைப்பதாக அறிவித்தது. இதையடுத்து, ஆங் சான் சூகியின் கட்சி உட்பட 40 கட்சிகளை ராணுவ அரசாங்கம் கலைத்தது.எலோன் மஸ்க்
ட்விட்டரில் பில் கேட்ஸ் குறித்த பயனாளரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் எலான் மஸ்க், `பில் கேட்ஸுக்குச் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி குறைந்த அளவே புரிதல் இருக்கிறது' எனப் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ``நான் தற்போது அதிபராக இருந்திருந்தால், ரஷ்ய-உக்ரைன் இடையேயான போரை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருப்பேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
மெக்ஸிகோ-அமெரிக்க எல்லைப் பகுதியில் குடியேற்றத் தடுப்பு மையத்தில், நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் புலம்பெயர்ந்தவர்களால், போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அங்கு தீ விபத்து ஏற்பட்டது. அதில் 39 பேர் உயிரிழந்தனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காந்தியின் மார்பளவுச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவில் 12 வயது சிறுமி, போருக்கு எதிராக ஓவியம் வரைந்ததால், அவரின் தந்தைக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொலையாளி ஏழு துப்பாக்கிகளைச் சட்டபூர்வமாக வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
கிரீஸ் நாட்டின் யூத உணவகத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக இரண்டு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் போதைப்பொருள்களால் ஏற்படும் குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் நைட்ரஸ் ஆக்சைட் (Laughing Gas) தடைசெய்யப்படவிருக்கிறது.
பிரான்ஸில் நீண்ட நாள்களாகப் புதிய ஓய்வூதியக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 7,40,000 பேர் பங்கேற்ற போராட்டத்தில், காவலர்களுக்கும், மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு பல இடங்களில் வன்முறை வெடித்தது.
http://dlvr.it/SljHXS
http://dlvr.it/SljHXS