இன்று தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறைமீதான மானியக் கோரிக்கையின் விவாதம் நடந்தது. தொடக்கம் முதலே அ.தி.மு.க உறுப்பினர்கள் ’நல்ல புகழ்பாடும் ஃபார்மில்’ இருந்தனர். `நாங்கள் என்ன குறைவா...' என்பதாக தி.மு.க அமைச்சர்களும் ஸ்டாலின் தொடங்கி இன்பநிதி வரை அவையில் பேசினர்.
அ.தி.மு.க அவைக்குறிப்புகள்:
கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க கட்சி உறுப்பினர்களின் துதிபாடல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், நேற்று ’அ.தி.மு.க பொதுச்செயலாளரின் தீர்ப்பு’ வந்ததையொட்டி இன்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கர்ஜிக்கத் தொடங்கினர். நேற்றே, ``அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் செல்லும்” எனத் தீர்ப்பு வெளியானதை அந்தக் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள்ளேயே கொண்டாடினர். இன்று அந்தத் தீர்ப்பின் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. எடப்பாடி பழனிசாமி
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசியபோது, "மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்.ஜி.ஆர், கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, புகழ்பெற்ற தமிழக சட்டசபைக்கு வருகை தந்திருக்கும் கழகத்தின் மூன்றாம் தலைமுறை தலைவர், புரட்சித் தலைமகன், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியாரை வணங்கி...'' என்றவாறு தன் உரையைத் தொடங்கினார்.
அதேபோல் அ.தி.மு.க உறுப்பினர் ஜெயக்குமார், ``எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் யோகம் வரும். நாங்களும் ஆட்சிக்கு வருவோம்’’ எனச் சொல்லி, ``தடைகளைத் தகர்த்தெரிந்திருக்கும் கழகப் பொதுச்செயலாளரை வணங்கி என் பேச்சைத் தொடங்குகிறேன்" எனக் கூறினார். ஆர்.பி. உதயகுமார்
மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , “காவிரி காப்பாளர், எதிர் வருகின்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தன் புன்னகையால் கடந்துவந்த சாமான்ய முதலமைச்சர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்த மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர், ஜனநாயகத்தின் காவலர், வருங்கால முதலமைச்சர்” என இரண்டரை நிமிடத்துக்கும் மேலாக பழனிசாமி பற்றி அவர் பேசிய, புகழுரை அவையில் இடம்பெற்றது.
கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியோ, ”பாய்ந்துவரும் ஈட்டியைத் தாங்குற வீரத்தையும் விவேகத்தையும் அறிவையும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற பொதுச்செயலாளர்... ஒரே பொதுச்செயலாளர், சூரியனால் உருக்க முடியாத எங்கள் தலைவரை வாழ்த்தி உரையைத் தொடங்குகிறேன்” என துதியை அள்ளித் தெளித்தார்.`எடப்பாடி கே பழனிசாமி’
தி.மு.க அவைக்குறிப்புகள்:
மானியக் கோரிக்கை பதிலுரையின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “முப்பெரும் தலைவராக இருந்துவருகிறார் ஸ்டாலின். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என அவர் பதவியேற்றதைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே ஆனந்தக் கண்ணீரில் மிதந்தது. ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருப்பது’ என் பெருமை. என் மாவட்டத்துக்குப் பெருமை. பூமிக்கு ஒரு சூரியன். ஆனால், தமிழகத்துக்கு இரண்டு சூரியன்கள். ஒன்று 'தலைமைச் சூரியன்', மற்றொன்று 'இளைய சூரியன்'. இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்து சிறப்பான பணி செய்துவருகிறார். விளையாட்டுப் பிள்ளை என அனைவரும் சொன்னார்கள். ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சராக மாறி வியக்க வைக்கிறீர்கள்" எனக் கிடைத்த நேரத்தில், பதிலுரைக்கு பதிலாகப் புகழுரைகளை அள்ளி வீசினார். சட்டப்பேரவை: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எது?' - அதிமுக-திமுக இடையே அனல் பறந்த விவாதம்!
`இன்பநிதிக்கும் அமைச்சராக இருப்பேன்!'
அடுத்ததாகத் தன் துறைக்கான பதிலுரையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலைஞர் பற்றிய நினைவலைகள் குறித்துப் பேசினார். “நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப்போகிறவன் நான். அப்போது என் கல்லறையில் ஒரு வரி எழுதினால் போதும். `கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்' என எழுத வேண்டும்" என அவர் உணர்ச்சிபூர்வமாகப் பேசியதைக் கண்டு, மொத்த அவையும் அமைதியானது. உடனே அவைத்தலைவர் அப்பாவு, “100 ஆண்டுகள் நன்றாக இருப்பீர்கள் நீங்கள்” என்றார். கருணாநிதி - துரைமுருகன்
``ஆமா, இருப்பேன்.." என மீண்டும் ஒரு கதைக்குள் சென்றார் துரைமுருகன். ”சண்டைக்கு அப்பறம் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்துகொண்டபோது, ஆளுநர் என்னோட வயசப்பத்தி கேட்டார். முதலமைச்சரோ, `அவர் என் அப்பாவோடு 53 ஆண்டுக்காலம் இருந்தவர், இப்போது என்னோடு இருக்கிறார், உதயாவோடும் இப்போது இருக்கிறார்’ என்றார். அதற்கு நான் சொன்னேன், `உதயாவுக்கு ஒரு பையன் இருக்கான், அவனோடவும் நான் இருப்பேன்' என்றேன்" என்றார்... துரைமுருகன் இப்படிச் சொன்னதும் அவையில் முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் வெடித்துச் சிரித்தனர்.
மீண்டும் தொடர்ந்த அவர், ``நான் சொன்ன பதிலைக் கேட்டு ஆளுநர் அதிர்ச்சியாகி ’வாட் இஸ் யுவர் ஏஜ்’ எனக் கேட்டார். இப்போது 80 வயது, 100 வயதாகும்வரை நான் இருப்பேன். ஆமா... இந்த டெக்னிக் கலைஞர் சொன்னது. `எத்தனை வயதானாலும் வயசு குறைவா இருக்குனு நினைச்சுக்கிட்டு அப்படியே நிக்கணும்' எனச் சொல்லியிருக்கிறார்’’ என நினைவுகூர்ந்தார்.துரைமுருகன்
அதேபோல், 60 செக் டேம்கள் கட்டுவது தொடர்பாக அ.தி.மு.க உறுப்பினர் கேட்டார்... ‘1,000’ கட்டுவீங்களா என்று... இப்போ தொடங்கினால் இன்னும் 20 ஆண்டுகளில் முடிக்க மாட்டோமா... நாங்கதான் ஆட்சியில இருக்கப்போறோம்’’ என்றது அவையில் இருப்போரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.ஆளுநர் சூதாட்டம்! - எங்கள் காதுகள் பாவமில்லையா? - சட்டசபை ‘மைக்ரோ’ பிட்ஸ்!
http://dlvr.it/SljHkZ