கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவது பிரசாரம் மேற்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதன் ஒருபகுதியாக கர்நாடக மாநிலத்திலிருக்கும் கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லலித் மோடி, மோசடி வைர வியாபாரி நிரவ் மோடி குறித்தெல்லாம் விமர்சித்தார். ராகுல்
இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சமூகத்தையே அவமதித்துவிட்டார். ‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15,000-த்துடன் ஜாமீனுக்கு ஒப்புதல் அளித்தது. மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ்
பின்னர் அவரது எம்.பி பதவியும் பறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 3-ம் தேதி சிறைத் தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டில் அனைத்து ஆவணங்களையும் ஆய்வுசெய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "சூரத் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைப்பதற்கான, மேல்முறையீட்டாளர் ராகுல் காந்தியின் மனு இதன் மூலம் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "காங்கிரஸ் கட்சி தற்போது இருக்கும் அனைத்துச் சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. காலக்கெடுவின் கடைசி நாளான இன்று மத்திய டெல்லியிலுள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
இது குறித்து அந்தக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ''இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை யாராலும் பிரிக்க முடியாது. சிலர் அவரைத் தங்களது மகனாகப் பார்க்கிறார்கள். சிலர், அவரைச் சகோதரனாகப் பார்க்கிறார்கள். சிலர் அவரைத் தலைவராகப் பார்க்கிறார்கள். அதனால்தான் நாடு, என் வீடு உங்கள் வீடு எனக் கூறுகிறது'' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "'மக்களவைச் செயலகத்தின் உத்தரவின் பேரில் ராகுல் காந்தி தனது அரசு இல்லத்தை காலி செய்துவிட்டார். ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம். ஆனாலும், அவர் விதிகளுக்கு மதிப்பளிப்பவராக இல்லத்தை காலி செய்துவிட்டார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். சூரத் வழக்கு: 'ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி'... அதிர்ச்சியில் காங்கிரஸார் - அடுத்து என்ன?!
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க-வினர், "கீழமை நீதிமன்றத்தின் தண்டனையை உறுதிசெய்யும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு காந்தி குடும்பத்தின் முகத்தில் அறைந்தது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
http://dlvr.it/SmwvJ6
http://dlvr.it/SmwvJ6