Wednesday, 3 May 2023
Tuesday, 2 May 2023
Mann Ki Baat 100: ரேடியோ உரையால் பிரதமர் மோடி சாதிப்பதுதான் என்ன?!
பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் `மன் கி பாத்’ உரையின் 100-வது நிகழ்ச்சியை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, `மன் கி பாத்' (மனதின் குரல்) எனும்பெயரில் நாட்டு மக்களுடன் ரேடியோ மூலமாக உரையாற்றிவருகிறார். அதன் 100-வது உரை நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி, ஐ.நா முதல் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் பிரதமர் மோடியின் 100-வது உரை ஒளிபரப்பப்பட்டது. `மன் கி பாத்' (மனதின் குரல்)
இந்த நிலையில், பிரதமர் மோடியின் `மன் கி பாத்' உரையால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன... இதனால் என்ன சாதிக்கிறார் பிரதமர் மோடி... உள்ளிட்ட கேள்விகளை பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசனிடம் முன்வைத்தோம். நம்மிடம் பேசியவர், ``பிரதமரின் மனதில் உதித்த ஒரு புதுமையான திட்டம் `மன் கி பாத்’. வடகிழக்கு மாநிலங்கள் முதல் தார் பாலைவனம் வரை, கார்கில் பனிப்பிரதேசம் முதல் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வரை அனைத்துப் பகுதி மக்களையும் ரேடியோ மூலம் சென்றடைந்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த உரையின் வாயிலாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் செய்யும் நல்ல விஷயங்களைக்கூட பொதுவெளியில் பாராட்டிப் பேசுகிறார். பொதுவாக தேசத்தின் பெருமையை சமூக அடுக்கின் மேல்தட்டில் இருப்பவர்களைப் பற்றி பேசியே மாய்ந்துபோகிறோம். ஆனால், பிரதமர் மோடி சமூக அடுக்கின் கீழே இருக்கும் மக்கள் எப்படிச் சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறார்.சென்னையில் பிரதமர் மோடியின் `மன் கி பாத்' 100-வது சிறப்பு நிகழ்ச்சி! - புகைப்படத் தொகுப்பு
ஒரு மண்பானை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளி, மரம்வைக்கும் மூதாட்டி, வாழைநாரில் கைவினைப்பொருள்கள் செய்யும் பெண்மணி என எளிய மக்களைப் பற்றிப் பேசுகிறார். ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது தவறுசெய்பவர்களைத் தட்டிக்கேட்பது மட்டுமல்ல, நன்மை செய்பவர்களைத் தட்டிக்கொடுப்பதும்தான் என்றவகையில் பிரதமர் மோடி நன்மை செய்யும் எளிய மக்களைத் தட்டிக்கொடுக்கிறார். இது அந்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்திவருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வேர்களுக்கு இருக்கின்ற பெருமை வெளி உலகுக்குத் தெரிந்திருக்கிறது. பிரதமரின் ஆளுமைக்கு இருக்கும் வசீகரம் மக்களை ஈர்த்திருக்கிருக்கிறது. இதற்கெல்லாம் `மன் கி பாத்’ உரையின் மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.இராம ஸ்ரீனிவாசன்
அதேபோல பிரதமர் மோடியின் `மன் கி பாத்’ உரை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கருத்து கேட்டோம். ``பிரதமர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு தன் கருத்துகளைக் கூற `மன் கி பாத்’தை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் பல கருத்துகளைக் கூறிவருகிறார். ஆனால், அவரது உரையின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே கிடையாது. மக்களுக்காகப் பேசுகிறார் என்றால், டெல்லியில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஓராண்டாக விவசாயிகள் போராடினார்களே... அவர்களைச் சந்தித்து, `உங்களின் பிரச்னை என்ன?' என்று கேட்டாரா பிரதமர் மோடி. குறைந்தபட்சம் வேளாண்துறை அமைச்சரையாவது அங்கு அனுப்பிவைத்தாரா... இல்லை;
இப்போதும் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்னையை காதுகொடுத்து கேட்கக்கூட பிரதமர் மோடி தயாராக இல்லை! ஆனால், பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் கேட்டனர். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் பிரச்னையைக் கேட்டு ஆறுதல் சொல்லி ஆதரவளித்தனர்.மன் கி பாத்: ``இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் பங்கிருக்கிறது!" - மோடிகோபண்ணா
1977-ல் பீகார் மாநிலம், பெல்சியில் 10-க்கும் மேற்பட்ட தலித் மக்கள், மாற்றுச் சாதி நிலபிரபுக்களின் அடியாள் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது கனமழை, ஆற்றில் வெள்ளம், சேரும் சகதியுமான பாதை என பல்வேறு தடைகளைத்தாண்டி 10 கி.மீட்டருக்குமேல் யானைமீது அமர்ந்துசென்று பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் இந்திரா காந்தி!
அந்த மக்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித்தந்தார். ராஜீவ் காந்தியும் அதைத்தான் செய்தார். அந்த வரிசையில் பாரத் ஜோடோ யாத்திரையின்மூலம் நாட்டு மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. அவர் மக்களோடு உரையாடினார் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இதற்கெல்லாம் மூலக்காரணம், `எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கு சென்று மக்களின் குறைகளைக் காதுகொடுத்து கேட்க வேண்டும்' என்கிற நேரு குடும்பத்தின் பாரம்பர்யம்தான்.`தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி நான்!' - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை ராகுல் காந்தி - மோடி
ஆனால், பிரதமர் மோடியோ தொலைக்காட்சியிலும் `மன் கி பாத்’ ரேடியோவிலும் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர மக்களை நேரில் சந்திக்கத் தயாராக இல்லை. ஒரு நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஜனநாயக உணர்வு இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தேவைக்கு அதிகமாகவே எம்.பி-க்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் ஒரு `நாடாளுமன்ற ஜனநாயகவாதி'யா என்றால் இல்லை! மோடி மீது மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. காரணம் மோடி ஒரு ஜனநாயகவாதி இல்லை! மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி!" என்றார்.`தன்னிறைவு பாரதம் முதல் தமிழர்கள் வரை!' - 2020-ம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி
http://dlvr.it/SnNyBX
http://dlvr.it/SnNyBX
Monday, 1 May 2023
``ஊழலில் வளர்ந்த காங்கிரஸ் என்னை விஷப் பாம்பு என்கிறது" - பிரதமர் மோடி காட்டம்!
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் களமானது பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் மோடி, அமித் ஷா, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரின் பிரசாரங்களால் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன்புகூட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கார்கே, மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பவே, ``நான் மோடியைக் குறிப்பிடவில்லை. பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை விஷப் பாம்பு என்றேன்" எனக் கூறிய கார்கே, இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.மல்லிகார்ஜுன கார்கே - மோடி
இருப்பினும் பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமே இருந்தன. பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர்கூட ``சோனியா காந்தி விஷப் பெண்மணியா?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தன்னை விஷப் பாம்பு எனக் கூறுவதாகவும், கர்நாடக மக்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசிய மோடி, ``காங்கிரஸ் ஒரு காலாவதியாகிவிட்ட இன்ஜின். காங்கிரஸிடம் போலி வாக்குறுதிகள் இருக்கின்றன. பொதுமக்களுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே காங்கிரஸின் ரெகார்ட் (Record). ஆனால், பா.ஜ.க பல வளர்ச்சிப் பணிகளைச் செய்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறது. மேலும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கென்று அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏழைகளை எப்போதும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.மோடி
ஆனால் பா.ஜ.க, விவசாயிகளுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் சிலரைத் திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் செய்கிறது. பா.ஜ.க அப்படியல்ல. அதோடு காங்கிரஸ் எப்போதுமே ஊழலில்தான் வளர்ந்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக பா.ஜ.க-வால் மட்டுமே உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு ஊழலுக்கு எதிராக நான் போராடுவதால்தான் காங்கிரஸ் என்னை வெறுக்கிறது. என்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்கின்றனர். இந்தத் தேர்தலுக்காக விஷப் பாம்பு என்ற தலைப்பில் காங்கிரஸ் என்னை பாம்புடன் ஒப்பிடுகிறது. அவர்களுக்கு மே 10-ம் தேதி கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.கர்நாடகா: ``25 ஆண்டுக்கால வளர்ச்சிக்கான திட்டம்... இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு!" - பிரதமர் மோடி
http://dlvr.it/SnLKRQ
http://dlvr.it/SnLKRQ
Sunday, 30 April 2023
"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!" - ஆபரேஷன் SABS - கிசுகிசு: அடுக்குமாடி வீடு: கவனிக்க...
"தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள் வைகோ..!"
வைகோ
அண்ணா காலத்து அரசியல்வாதியான மதிமுக அவைத் தலைவர் சு.துரைசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
'30 ஆண்டுகாலமாக உங்கள் உணர்ச்சிமயமான பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்களை இனியும் ஏமாற்றாதீர்கள். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. தாய்க் கழகமான திமுகவுடன் இணைப்பதே நல்லது' என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இக்கடிதம் குறித்து நம்மிடம் பேசிய சு.துரைசாமி, " எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி ஆரம்பித்தாரோ அதற்கு நேர்மாறாக, மதிமுகவில் இன்று குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது" எனக் குற்றம் சாட்டி உள்ளார்.
வைகோ மீதான அதிருப்திக்கு சு.துரைசாமி கூறும் காரணங்களையும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
வைகோவுக்கு மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்தில் உள்ளது என்ன?
படிக்க இங்கே க்ளிக் செய்க...
ஆபரேஷன் SABS... டீ குடித்தவரைத் தூக்கிய திருச்சி டீம்!
ஆபரேஷன் SABS; சிக்கலில் சபரீசன்?
"வருமான வரித்துறையின் திடீர் அதிரடி ரெய்டால், ரியல் எஸ்டேட் நிறுவனமான 'ஜி ஸ்கொயர்' ஆடிப்போயிருக்கிறது.
தொடக்கத்தில், 40 இடங்களில் நடந்த ரெய்டு, அடுத்த 48 மணி நேரத்தில் 90 இடங்களாக விரிந்து, கடைசியில் 140 இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
இந்த ரெய்டில், வருமான வரித்துறைக்கு ஜாக்பாட்டாகச் சிக்கியவர் ஆடிட்டர் சண்முகராஜாதான். சபரீசனின் ஆடிட்டரான இவரின் மேற்பார்வையில்தான், பல்வேறு தொழில்களும் பரிவர்த்தனைகளும் நடந்ததாகச் சந்தேகிக்கிறது வருமான வரித்துறை.
ஆபரேஷன் SABS' ஏன், எப்படி நடந்தது..?
விசாரணை வளையத்தில் யாரெல்லாம் சிக்கியிருக்கிறார்கள்... சிக்குகிறார்கள்..?
- விரிவான, விறுவிறுப்பான தகவல்கள் இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில்...
படிக்க இங்கே க்ளிக் செய்க...
கிசுகிசு: மெர்சல் நடிகருடன் மோதும் சேனல்!
கிசுகிசு
ஜூன் மாதம்தான் கோட்டையின் உச்ச அதிகாரி ஓய்வு பெறுகிறார்.
இந்த நிலையில், 'மூன்று மாதங்கள் மட்டும் அந்த உச்ச பதவியில் உட்கார்ந்துகொள்கிறேன். அதன் பிறகு வி.ஆர்.எஸ் கொடுத்துவிடுகிறேன்' எனச் சொல்லி, வடக்கத்திய அதிகாரி ஒருவர் பேசுகிற பேரம் கோட்டையையே திகைக்க வைக்கிறதாம்.
கிசுகிசு பகுதியில் மேலும்...
* மெர்சல் நடிகருடன் மோதும் சின்ன தலைவியின் சேனல்!
* முதன்மையானவர் குறித்து பேசிய அமைச்சர்களின் பட்டியல்!
* பணிவானவர் மாநாடு குறித்து டெல்லிக்கு சொல்லப்பட்ட விஷயங்கள்..!
* அண்ணன் தலைவரின் திடீர் அமைதிக்கு காரணம்...
என அனைத்து அரசியல் கிசுகிசுக்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
உச்ச நீதிமன்றத்துக்கே உத்தரவிட்ட ஹைகோர்ட் நீதிபதி! - நடந்தது என்ன...?
உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்
மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஊடகத்தில் தான் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையை நள்ளிரவு 12 மணிக்குள் தன்னிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றச் செயலாளருக்கு உத்தரவு போட்ட நிகழ்வு பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில் இதற்கு உச்ச நீதிமன்றம் ஆற்றிய எதிர்வினை என்ன..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
மூடப்படும் ஷீர்டி சாயிபாபா கோயில்! - என்ன காரணம்?
ஷீர்டி சாயிபாபா கோயில்
மகாராஷ்டிராவில் ஷீர்டி சாயிபாபா கோயில் மிகவும் புகழ்பெற்ற புனிதஸ்தலமாகக் கருதப்படுகிறது. விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தரிசிக்க வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 1-ம் தேதியிலிருந்து காலவரையற்று சாயிபாபா கோயிலை மூடப்போவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம்..?
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்..!
அடுக்குமாடி குடியிருப்புக்கள்
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களில் வீட்டுமனைகளின் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில், பலரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவ்வாறு அடுக்குமாடி வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான அம்சங்களை இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் தெரிவிக்கிறார் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன்.
படிக்க இங்கே க்ளிக் செய்க...
வியர்க்குரு... இயற்கை முறையில் எளிய தீர்வுகள்!
வியர்வை, வியர்க்குரு
கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.
அவர் பகிர்ந்த வியர்க்குரு பிரச்னைக்கான தீர்வுகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
Ponniyin Selvan 2: 'நாவலில் இல்லாததைச் சேர்த்தது ஏன்?' - மணிரத்னம் சொல்வது என்ன?
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்-2' நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நாவலில் இல்லாத விஷயங்களைப் படத்தில் சேர்த்ததும், நாவலில் இருந்ததை மாற்றியது குறித்தும் விவாதங்கள் எழுந்திருப்பதை பார்க்கமுடிகிறது.
இது தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த விகடன் பேட்டியில் (26/04/2023) இயக்குநர் மணிரத்னம் சொன்னதை படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
மிஸ்டர் மியாவ்: பெரிய தொகை கேட்கும் விஜய்!
படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/SnJ8sb
http://dlvr.it/SnJ8sb
Saturday, 29 April 2023
'நிலக்கரி ஊழலில் சிக்கும் அதிகாரிகள்' - தமிழக மின்வாரியத்தில் என்ன நடக்கிறது?
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி வீட்டு மின் இணைப்பு 2.35 கோடி, வணிகம் 37 லட்சம், தொழிற்சாலை 7 லட்சம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 3.31 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. மாநிலத்தின் உட்சபட்ச மின்தேவையின் அளவு 15,000 மெகாவாட்டுக்கு மேல் இருக்கிறது. அனல் மின் நிலையம்
இதற்கு தேவையான மின்சாரம் அனல், சூரியசக்தி, காற்றாலை, நீர் மின் நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஆங்காங்கு இருக்கும் துணை மின்நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு அழுத்தம் குறைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் அனல் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவே அதிகமாகும். இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வாங்கப்படுகிறது. நிலக்கரி
பிறகு கப்பல்கள் மூலமாக உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடத்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இதுகுறித்து அறப்போர் இயக்கம், "மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்திலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு அலுவலகம்
அதன் ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்தில் வரியாக கட்டிய பணத்தின் உண்மையான பில்களை சமர்ப்பிர்க்காமல் போலியாக அதைவிட பல மடங்கு பணத்தை பெற்று மோசடி ஊழல் செய்தனர். இதில் மின்சார வாரிய பொது ஊழியர்களும் கூட்டு சதி செய்திருக்கிறார்கள்.
கடந்த 2011 முதல் 2016 வரை ரூ.1028 கோடி ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018-ம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது. இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை ரூ.908 கோடி ஊழல் நடந்தது ஊர்ஜிதம் செய்திருக்கிறது. FIR
இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மொத்தம் 10 பேர் மீது FIR பதிந்துள்ளது" என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் வீடுகளில் கடந்த 24-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் பிறருடன் தொடர்புடைய 10 இடங்களில் ED சோதனைகளை மேற்கொண்டது.
இதில் டிஜிட்டல் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தொடரும் மின் விபத்து... அடுத்தடுத்து உயிரிழப்புகள்... அச்சத்தில் பொதுமக்கள்!
http://dlvr.it/SnG0Ff
http://dlvr.it/SnG0Ff
Friday, 28 April 2023
ஆன்லைன் சூதாட்டம்: `தமிழக அரசு தடைச் சட்டம் இயற்றியதில் என்ன தவறு?' - சென்னை உயர் நீதிமன்றம்
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடைவிதிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு, ஒருவழியாக ஏப்ரல் 10-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கூடவே, அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பும், கேம்ஸ்க்ராஃப்ட் (Gameskraft) என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனமும் தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.ஆன்லைன் ரம்மி
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா, பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பிலிருந்து, ``ரம்மி உள்ளிட்டவை திறமைக்கான விளையாட்டுகள், சூதாட்டமல்ல. தமிழ்நாட்டில் புகையிலை, மது போன்றவற்றைத் தடை செய்யாத நிலையில், ஆன்லைன் ரம்மியை மட்டும் அரசு தடைசெய்திருக்கிறது. எனவே இதை ரத்துசெய்ய வேண்டும்.
அதோடு இந்த வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், தினசரி மில்லியன் கணக்கில் இழப்பு ஏற்படும்" என நீதிபதிகளிடம் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``மக்களைப் பாதுகாக்கவே அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், பிற இழப்புகளைத் தடுக்க அரசு சட்டம் கொண்டுவந்ததில் என்ன தவறு" எனக் கருத்து தெரிவித்துக் கேள்வியெழுப்பினர்.சென்னை உயர் நீதிமன்றம்
அதேசமயம் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ``தமிழ்நாடு அரசின் விளக்கத்தைக் கேட்காமல் இதில் எந்தவோர் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக் கூறி ஆறு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.நீதிமன்றத்தில் தாக்குப்பிடிக்குமா ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்? - தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?!
http://dlvr.it/SnC7cH
http://dlvr.it/SnC7cH
Thursday, 27 April 2023
`தனிப்பட்ட மதத்துக்கு இட ஒதுக்கீடு, அரசியலமைப்புக்கு எதிரானது’– கர்நாடகாவில் யோகி ஆதித்யநாத் பேச்சு
கர்நாடகத்தில் மே 10-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் ‘ஸ்டார்’ பேச்சாளர்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘ரோடு ஷோ’ சென்று, வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இன்று, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாண்டியா மாவட்டத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தினார். முன்னதாக, ஒக்கலிகா சமூக மக்களின் வாக்குகளைக் கவர, ஒக்கலிகா மடங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து, அவர்களின் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
‘மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு!’
நிகழ்ச்சிகளில் பேசிய யோகி ஆதித்யநாத், ‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, வளர்ச்சியை நோக்கி நகர்ந்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், ஐந்தாண்டுத் திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்துவதற்குள், அடுத்த ஐந்தாண்டு திட்டம் வந்துவிடும். இதனால், ஐந்தாண்டு திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சியிலோ, நாங்கள் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்தும்போதே, திட்டத்தின் தொடக்கவிழாவைத் தீர்மானித்துச் செயல்படுத்திவருகிறோம். மோடி தலைமையிலான பா.ஜ.க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறது.யோகி ஆதித்யநாத்
நம் நாடு ஏற்கெனவே மதங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறது. நாங்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளைத் தடைசெய்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியினர், மதங்களைத் திருப்திப்படுத்த, தனிப்பட்ட மதத்துக்கு பிரத்தியேக இட ஒதுக்கீடு வழங்கியிருக்கின்றனர். மதங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புக்கு எதிரானது. இப்படித்தான், மதங்களைப் பிரித்து காங்கிரஸார் அரசியல் செய்கின்றனர்.
பாதுகாப்பான மற்றும் வளமான இந்தியாவுக்காக, கேப்டன் நரேந்திர மோடியின் வலுவான அணிக்கு கர்நாடகா மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். கர்நாடகாவில் வளர்ச்சியைக் கொடுத்திருக்கும், ‘டபுள் இன்ஜின்’ பா.ஜ.க அரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
கர்நாடகத்தில், இஸ்லாமிய மக்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய முயன்ற பா.ஜ.க அரசின் முடிவை, உச்ச நீதிமன்றம் நேற்று தற்காலிகமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது. இப்படியான நிலையில், ‘இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது. இதை ரத்துசெய்ய வேண்டும்’ என்ற கோணத்தில், நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருக்கின்றனர்.இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து... தேர்தல் விளையாட்டில் கர்நாடக பா.ஜ.க!
http://dlvr.it/Sn84c3
http://dlvr.it/Sn84c3