அயோத்திதாச பண்டிதர் நினைவுதினத்தை முன்னிட்டு, இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தென்னிந்தியாவில் முதன்முதலாகச் சாதிய இழிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராளியின் நினைவுதினம் இன்று. அவருக்கு எங்கள் புகழஞ்சலி.சீமான்
ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதருக்கான சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கின்றன. தமிழர்களின் வரலாற்றைத் திட்டமிட்டு அழிப்பதுதான் இந்திய, திராவிட மாடல் ஆட்சி. இதே நிலை தொடராது என்பதை உறுதியாகக் கூறுகிறோம். `திராவிட மாடல் காலாவதியானது’ என ஆளுநர் கூறியிருக்கிறார். அதற்கு முன்னால் காலாவதியானது குஜராத் மாடல். சமீபமாக இரண்டு ஆண்டுகளாகத்தான் `திராவிட மாடல்' ஆண்டுகொண்டிருக்கிறது.
குஜராத் மாடல் பழைய அம்பாசிடர்... திராவிட மாடல் கொஞ்சம் புதிய அம்பாசிடர். இதுவும் கொஞ்சநாள் ஓடும். முதல்வர் ஸ்டாலினைவிடச் சிறப்பாக ஆட்சி செய்பவர்களெல்லாம் இருக்கிறார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பள்ளிகளை நட்சத்திர விடுதியின் தரத்துக்கு உயர்த்திவிட்டார். கேரளாவில் 30 சதவிகித தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் திராவிட மாடல் என்றால் சமாதி கட்டுவதும், பேனா வைப்பதும், பள்ளிக்கூடங்களைக் கட்ட பணமில்லை என மக்களிடம் கையேந்துவதும், ஆதிதிராவிடப் பள்ளிகளை பொதுப்பள்ளியாக மாற்றுவதும்தானே!சீமான்
வீட்டில் தெலுங்கு பேசுபவர் தமிழர், தமிழ் பேசும் நாங்கள் திராவிடர்களா... இந்தியாவுக்கு யார் வந்தாலும், இந்தியராகிவிடுகிறார்கள். எந்த திராவிடர் வந்தாலும் தமிழராகிவிடுவார்கள். தமிழர்கள் அனைவரும் திராவிடர்களாகிட வேண்டும். இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது... திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று ஆளுநர் கூறுவதை ஏற்கிறேன். திராவிட மாடல் என்பது இத்துப்போன / தீய்ந்துபோன மாடல்தான். ஒவ்வொருவருக்கும் மதக்கோட்பாடு என ஒன்று இருக்கிறது. மதம், உடை, உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை.
ஆனால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்மீதான வெறுப்பு மட்டுமே உங்கள் அரசியல் கொள்கையாக இருந்தால், இந்தியாவின் அந்நியச் செலாவணியில் இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டுக்கறி மூலம் வரும் லாபம் வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போராட வேண்டியதுதானே... இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, லட்சம் கோடியில் கடன் வாங்கிக்கொண்டு, இங்கு இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை பரப்புவது என்ன மாதிரியான மனநிலை... `தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் பிரச்னைகளை உருவாக்கி, அதில் புகழ்பெற விரும்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படமே தேவையற்றது.தி கேரளா ஸ்டோரி
நான் ஷரியத் சட்டத்தை முழுவதும் படித்தேன். பெண்களுக்கு அதிக பாதுகாப்பு நபிகள் நாயகம் வகுத்துக் கொடுத்த ஷரியத் சட்டத்தில்தான் இருக்கிறது. வேண்டுமானால் நீங்களும் படிக்கலாம். தேவையில்லாமல் அவர்களிடம் சிக்கலை உருவாக்குவது தவறு. `தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழ்நாட்டில் தடைசெய்வதற்கு பலமுறை ஊடகங்கள் மூலம் கோரிக்கைவைத்தும், போலீஸ் பாதுகாப்புடன் படத்தைத் திரையிட அனுமதி கொடுத்து அரசு ஏன் பிரச்னையை உருவாக்குகிறது... தியேட்டர் வாசலில் நான் முற்றுகையிட்டு போராடினால் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்கிறேன் எனக் கூறுவீர்கள்தானே?
இதில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு நாங்கள்தான் என்றும் கூறிக்கொள்வீர்கள். கலைஞர் ஆட்சியின்போது `டார்வின் கோட்’ படம் தடைசெய்யப்பட்டது. அப்போது கமல்ஹாசன் என்னிடம், `பகுத்தறிவு ஆட்சியென்றெல்லாம் பேசிக்கொள்கிறோம். ஆனால், இந்தப் படத்தை தடைசெய்துவிட்டார்களே... இதையெல்லாம் பேச மாட்டீர்களா' எனக் கேட்டார். அந்தப் படம் ஏன் தடைசெய்யப்பட்டது... கிறிஸ்தவர்கள் மனம் புண்படும், அவர்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காகத்தானே... அப்படி இருக்கும்போது இந்த `தி கேரளா ஸ்டோரி’யை மட்டும் ஏன் தடைசெய்யவில்லை?ஸ்டாலின்
கேரளாவில் பிரச்னை செய்ய ராமர் கோயிலைக் கையிலெடுத்தார்கள். அதன் பிறகு ஐயப்பன் கோயிலைக் கையிலெடுத்தார்கள். எந்த அரசியலும் அங்கு எடுபடவில்லை என்றதும், இஸ்லாமியர்கள்மீதான தாக்குதலைக் கையிலெடுத்திருக்கிறார்கள். மோடி வந்துவிடுவார் எனப் பூச்சாண்டி காட்டி, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நம்மைவிட்டால் வேறு நாதி இல்லை என்ற மனநிலையில் அரசு இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது. கேரள முதல்வர் இவர்களின் திட்டம் புரிந்துதானே கண்டித்தார்... ஒன்றுமே இல்லாத பா.ஜ.க-வை வளர்த்துவிட்டது தி.மு.க-தான். பா.ஜ.க-வின் மெயின் டீம் தி.மு.க-தான்.
`கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற்றால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்வோம்' என வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 'தான் வாழும் நாட்டைவிட தான் சார்ந்திருக்கும் மதம்தான் பெரியது எனச் செயல்படத் தொடங்கினால், இந்த நாடு சுக்குச் சுக்காக உடைவதை எவராலும் தடுக்க முடியாது' என அம்பேத்கர் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.காங்கிரஸின் `மேக்கேதாட்டூ' வாக்குறுதி; ``தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி!" - சீமான் கண்டனம்!
http://dlvr.it/SncS0X
http://dlvr.it/SncS0X